
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1 துண்டு
தேங்காய் துருவல் - 0.5 கப்
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு, புளி, கடுகு, உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்; வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம் பருப்பு, இஞ்சியை போட்டு வறுக்கவும். இதனுடன், புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும். சுவைமிக்க, 'இஞ்சி துவையல்' தயார். சோற்றுடன் பிசைந்து சாப்பிட ஏற்றது. அனைவரும் விரும்பி உண்பர்!
- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

