
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அட்டை அனுப்பி வாழ்த்து சொல்லும் பழக்கத்தை, 1846ல் துவங்கிவைத்தார் ஹென்றி. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்தவர். இது, உலகம் முழுவதும் பரவியது.
நம் நாட்டில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகளவு வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டன. கடந்த சில ஆண்டுக்கு முன் வரை, ஆயிரக் கணக்கான அட்டைகள் குவிந்தன. பெரிய நிறுவனங்களே, நிறுவன பெயருடன் வாழ்த்து அட்டை அச்சடித்து தபாலில் அனுப்பின.
இன்று அந்த பழக்கம் குறைந்துவிட்டது. மின்னஞ்சல், வாட்ஸ் ஆப், குறிஞ்செய்தியில் வாழ்த்து கூறும் நடை முறை வழக்கத்தில் உள்ளது.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

