
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகைப் பிடிப்பது, பாக்கு போடுவது, காபி, டீ குடிப்பது போன்ற பழக்கங்களே, பற்களில் கறை படியக் காரணம். எலுமிச்சம்பழச் சாறில், உப்பு கலந்து பல் துலக்கினால், கறைகள் அகலும்.
ஆரஞ்சுப் பழத் தோல் உட்புறத்தாலும் துலக்கலாம். பிரியாணி இலையுடன், ஆரஞ்சு பழத்தோல் கலந்து உலர்த்தி, பொடியாக்கி பல் துலக்கினாலும், மஞ்சள் நிறக் கறை அகலும்.
எலுமிச்சைப் பழத்தோலை உலர்த்தி பொடி செய்து, பற்பொடியாக உபயோகிக்கலாம்.
பற்பசையின் மேல், சிறிது உப்பு கலந்து தேய்த்தாலும், பற்கள் பளபளக்கும்.
எலுமிச்சைத் பழத்தோலை உலர்த்தி பொடித்து, சிறிது உப்பு, இரண்டு துளி கடுகு எண்ணெய் சேர்த்து குழைத்து துலக்கவும். இது, பற்களைப் பளிச்சிட வைப்பதுடன், வாய் துர்நாற்றத்தையும் போக்கும்!

