
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான், முதுகலை பொறியியல் கல்வி பயின்ற போது, பேராசிரியர் மேட்ரிக்ஸ், கணித பாடத்தில் இரு தேற்றங்களை அறிமுகம் செய்தார்.
பின், ஐந்து கேள்விகளுடன், 'அசைன்மென்ட்' தந்தார்; அவற்றில், ஒரு வினாவுக்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கேள்வி நினைவுடன் இரவில் உறங்க சென்றேன்.
ஆச்சரியப்படும் விதமாக அதிகாலை, 3:00 மணிக்கு அந்த விடை மனதில் வந்தது. உடனே எழுந்து விளக்கு வெளிச்சத்தில் அந்த கணக்கை போட்டேன். நொடியில் தீர்வு கிடைத்தது. ஆசிரியர் கற்பித்த ஒரு தேற்றத்தின் அடிப்படையில் அது அமைந்திருந்தது.
வகுப்பில் கவனமாக இருந்தால் மாணவர்களுக்கு முறையான கல்வி கைகூடும் என்பதை அறிந்து கொண்டேன்.
- வெ.சுந்தரராஜன், மதுரை.

