
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 70; சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். சனிக்கிழமை என்றால் இனம் புரியாத மகிழ்ச்சி வந்துவிடுகிறது.
பள்ளி நாட்களில் நடந்த நிகழ்வுகளை, மலரும் நினைவுகளாக வெளிப்படுத்தும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி மிகவும் சுவாரசியமாக உள்ளது. சிறுவர்கள் வரையும் ஓவியங்கள், கண்களுக்கு நல்ல விருந்தளிக்கின்றன.
பிரச்னைகளுக்கு நல்ல அறிவுரைகளை, 'இளஸ்... மனஸ்...' பகுதி அள்ளி தருகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் புரியும் வகையில் எளிமையாக அறிவுரை வழங்குவது அபாரம். தொடர்ந்து சிறுவர்மலர் படிக்க, நீண்ட ஆயுளை கொடுக்கும்படி, கடவுளை வேண்டி வருகிறேன்!
- எஸ்.ஆண்டாள், கோவை.

