PUBLISHED ON : ஜூன் 05, 2021

என் வயது, 68; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவன். குடும்பத்தில் அனைவரும், தினமலர் நாளிதழில் ஒவ்வொரு பகுதியையும், ரசித்து படித்து வருகிறோம். அதிலும், சிறுவர்மலர் இணைப்பை முதலில் படிக்க போட்டி போடுவோம்.
நற்சிந்தனைகளையும், ஒழுக்கத்தையும் விதைக்கும் வண்ணம் வெளியாகும், குட்டிக் கதைகள், விலங்கு, பறவைகளை மையப்படுத்திய வண்ணக் கதைகள், ஆர்வத்தைத் துாண்டும் போட்டிகள், அறிவியல், வரலாறு, பூகோளம், மருத்துவம் என, பல தலைப்புக்களை உள்ளடக்கிய துணுக்குச் செய்திகள் கவர்கின்றன.
அமெரிக்காவில் வேலை பார்க்கிறான் என் மகன்; சிறுவர்மலர் இதழ் பிரதியை வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, அவனது மகளுக்கு வாசிக்கத் தருகிறான். என் ஐந்து வயது பேத்தி, 'நானும் ஓவியம் வரைந்து சிறுவர்மலர் இதழுக்கு அனுப்புவேன்...' என, ஆர்வமுடன் கூறிவருகிறாள். அவளிடம், 'உன் கனவு நிச்சயம் பலிக்கும்...' என, ஊக்கம் அளித்து வருகிறேன்.
சிறுவர்மலர் மென்மேலும் வளர்ந்து மணம் பரப்ப வாழ்த்துகிறேன்.
- எஸ்.வைத்தியநாதன், மதுரை.
தொடர்புக்கு: 94882 59160

