sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 18, 2011

Google News

PUBLISHED ON : செப் 18, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

** கே.விஜயராஜன், தொண்டாமுத்தூர்: நான் குண்டாக இருப்பதால், தாழ்வு மனப்பான்மை அதிகம். திறமைகளை அடக்குகிறேன்... இது சரியா?

ரொம்ப, ரொம்ப தவறு. குண்டாக இருப்பவர்கள் பொதுவாக கள்ளம் கபடு இல்லாதவர்கள். அனைவரிடமும், 'ஈசி'யாகப் பழகி ஒட்டிக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். ஏகப்பட்ட நகைச்சுவை இவர்களுக்கு இருக்கும் என்பதால், அனைவரும் இவர்களை விரும்புவர். குண்டாக உள்ளவர்களின் இது போன்ற, 'பிளஸ்'களை மட்டுமே இனி நினையுங்கள்... தாழ்வு மனப்பான்மை ஓடிப் போகும்!

***

*பி.நாதன், மதுரை: எள்ளுப் பேரன் என்கின் றனரே... அப்படி என்றால் என்ன?

உறவு சிறுத்துப் போவதை, தானியங்களை உதாரணம் காட்டி பெயர் வைத்தனர் நம் மூதாதையர். பிள்ளையின் மகன் பேரன், அவன் பிள்ளை கொள்ளுப் பேரன். பேரனை விட தூர உறவுடையவர், கொள்ளு பேரனுடைய பிள்ளை எள்ளு பேரன். கொள்ளை விட எள் சிறியது. (எள்ளுக்கு அடுத்த பேரன்? தெரியவில்லை... தெரிந்தவர்கள் எழுதுங்களேன்!)

***

*சா.பூராசாமி, விருதுநகர்: சமீபத்தில் படித்த திகைக்க வைக்கும் செய்தி ஏதேனும் கூறுங்களேன்...

'திருமணத்திற்கு முன், 'செக்ஸ்' வைத்துக் கொள்வது பாவமா, இல்லையா?' என்பது குறித்து, மும்பை யில் ஒரு பத்திரிகை, பெண்களிடையே கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. கணிப்பில் கிடைத்த தகவல் என்ன தெரியுமா? மூன்றில் ஒரு பெண், 'தவறு இல்லை' என்று கூறி இருக்கிறாள் - அதிர்ந்து விட்டேன்.

***

** நா.சிவசண்முகம், விழுப்புரம்: என்னதான் பெண் போலீசாக இருந்தாலும், அவர்களால் இரவு ரோந்து வர முடியவில்லையே...

அவர்கள் தயார்தான்... ஆனால், அடிப்படையில் நம் சமுதாயம் ஆணைச் சார்ந்து இருப்பதால், பெண் போலீசாரால் இரவு ரோந்துகளுக்கு வர முடியாமல், வீட்டை, 'கவனிக்க' வேண்டிய நிலையில் உள்ளனர்.

***

*செ.செந்தில், போரூர்: மேல் நாட்டில் பெண்களும் மது குடிக் கின்றனரே... அதே போல், நம் நாட்டில் எந்தப் பகுதியில் உபயோகிக்கின்றனர்?

நம் நாட்டின் எல்லா பகுதிகளிலும், மேல் தட்டு, கீழ் தட்டு - இந்தப் பிரிவினர் இடையே மிக சகஜமாக மது பழக்கம் இருக்கிறது... இதெல்லாம் இப்போ சகஜமாகிப் போச்சுங்க!

***

*வி.நந்தகோபால், காரணம்பேட்டை: ஆங்கில மொழி அகராதியை தலைகீழாகத் திருப்பி விட்டேன். 'கக்கூஸ்' என்பது, ஆங்கில மொழிச் சொல் இல்லையா?

இல்லையாம்... அது, இந்தி, தமிழ் மொழி சொல் கூட இல்லையாம்! 'டச்சு' மொழியாம். கழிப்பிடத்தை அம்மொழியில், 'கக்கயூஸ்' என்று சொல்வராம்... அதுதான் திரிந்து, இப்போது உள்ள வடிவத்தை எடுத்துள்ளது என்றார் விவரம் தெரிந்த நண்பர் ஒருவர்!

***

**எஸ்.சந்திரன், புதுச்சேரி: பெண்களுக்கு அளவுக்கு அதிகமான சுதந்திர மனப்பான்மை வளர்ந்து விட்டதால், விவாகரத்துக்கள் இப்போது பெருகி வருகிறதா?

இல்லை... சம அந்தஸ்து தரவில்லை என்றாலும், அட்லீஸ்ட் ஒரு உயிரினமாகவாவது மதிக்க வேண்டும் தம் கணவர் என, நினைக்கத் துவங்கி விட்டனர் பெண்கள். இது குற்றமா?

***

*சி.உஷா, திருப்பூர்: நம் தம்பி போல நினைக்கும் சின்ன பையன்கள் எல்லாம், நம்மை காதலியாக கருதுகின்றனரே... இவர்களை எப்படி திருத்துவது?

அந்த, 'சின்னப் பையன்'களிடம், 'தம்பி... அந்த பாடம் எப்படி?' 'தம்பி... எத்தனையாவது ராங்க் இந்த பரிட்சையில்!' 'தம்பி... நல்ல மார்க் எடுக்கணும்!' என, மூச்சுக்கு முன்னூறு முறை, 'தம்பி' போட்டு பேசச் சொல்லுங்கள். நிஜமா கவே,. தம்பிகளாக மாறி விடுவர்!

***






      Dinamalar
      Follow us