sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்

/

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : அக் 09, 2011

Google News

PUBLISHED ON : அக் 09, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*தி.பத்ரி நாராயணன், கோவை: என் பங்காளி ஒருவர், எதற்கெடுத்தாலும் கோர்ட்டுக்குப் போவேன் என, மிரட்டி கொண்டே இருக்கிறாரே...

பரிதாபப்படுங்கள்... எதற் கெடுத்தாலும் கோர்ட்டுக்கு செல் பவர்கள், எல்லாவற்றுக்கும் கஷ்டப்படுவர். அவசியமான வற்றுக்கு மட்டும், எப்போதாவது கோர்ட்டுக்குப் போகிறவர்கள் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடியும். பங்காளி காதில் போட்டு வையுங்கள்.

***

** கே.சந்திரசேகர், வேளச் சேரி: இலக்கியவாதியின் சொற் பொழிவிற்கும், அரசியல்வாதியின் சொற்பொழிவிற்கும் என்ன வித்தியாசம்?

வித்தியாசம் ஒன்றும் இல்லை; ஒற்றுமை தான் உண்டு. இரண்டுமே மனிதனின் பொன்னான நேரத்தை பாழ்படுத்துபவை, சோம்பேறி ஆக்குபவை, ஏமாற்றி, பம்மாத்து செய்பவை!

***

*க.சிவகுமார், பொள்ளாச்சி: மனிதனுக்கு மிக, மிக தேவைப் படுவது பணம் தான் என்கிறேன்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

உங்களது கருத்தை மறுக் கிறேன்; மனிதனுக்கு மிக, மிகத் தேவையானது மூளை! மூளை இருப்பின் அதை பயன்படுத்தி பணத்தை மட்டுமல்ல, இன்னும் தேவையானது என்னென்னமோ அனைத்தையும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், பணம் மட்டும் இருந்தால், மூளையை சம்பாதிக்க முடியுமா?

***

*ஆர்.வேலுச்சாமி, பம்மல்: கேள்வி கேட்கும் வாசகர்களை என்றாவது நேரில் சந்தித்து, அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியதுண்டா?

உண்டு... சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... சில நேரங்களில் நான் யார், என்று சொல்லிக் கொள்ளா மலேயே!

***

*க.சுப்பையா, பரமக்குடி: குற்றமே இல்லாத மனிதன் உலகில் உண்டா?

இருக்கவே முடியாது... துளையே இல்லாமல் நாதஸ்வரம் செய்ய முடியுமா; யோசித்துப் பாருங்கள்!

மனிதனாக பிறந்தவன், குற்றமுள்ள வனாகத்தான் இருப்பான். அவற்றைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்பவன், பிறந்ததன் நோக்கத்தை அடைய முயல்கிறான். அவன், சாதாரண மானிடனாகவே இருந்து மறை கிறான்!

***

*ஆ.சுப்ரமணியம், திண்டுக் கல்: மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்தால், நாளடை வில் கணவனை மதிக்க மாட்டாள் மனைவி, என்கிறானே என் நண்பன்...

தான் சோம்பேறியாய் சுற்றி திரிவதற்கும், உங்களையும் தன்னைப் போல் மாற்றி விடவும் உங்கள் நண்பர் போடும் திட்டத்தின் வெளிப்பாடே அந்த, 'ஸ்டேட்மென்ட்!' நான் அறிந்தவரை, உதவியாக இருக்கும் கணவரை மேலும், மேலும் மனைவியர் மதிக்கின்றனரே தவிர, மிதிக்கவில்லை!

***

*வி.சுரேஷ், அனுப்பானடி: புகழுடனும், பணத்துடனும் வாழ ஆசைப்படுகிறேன்... இதற்கு வேண்டியது என்ன?

திறமை... சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்ளும் திறமை. இதைக் கோட்டை விட்டவர்கள் பின்னர் வருந்துகின்றனர்!

***

**எம்.முத்துராஜ், தேனி: புகழ்ந்து பேசினால் மயங்கி விடுவராமே பெண்கள்...

அதெல்லாம் அந்தக் காலமாக இருக்கலாம்... நாய் ஏன் வாலாட்டு கிறது, மாடு ஏன் வாலைத் தூக்கு கிறது என்ற சூட்சுமங்களை இக்கால பெண்கள் நன்கு உணர்ந்தே இருக்கின்றனர்.

***






      Dinamalar
      Follow us