sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!

/

உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!

உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!

உடலின் பாதிப்புக்கு கை விரல் வைத்தியம்!


PUBLISHED ON : மார் 24, 2019

Google News

PUBLISHED ON : மார் 24, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கை விரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம்.

கட்டை விரல்: கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறையவும், மனநிலையை கட்டுப்படுத்தவும் முடியும், நல்ல உறக்கமும் பெறலாம். மேலும் இது, உடல் சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் சம்பந்தபட்டுள்ளது. இது, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த செல்களை ஊக்குவித்து, செரிமானத்தை சீராக்குகிறது

ஆள்காட்டி விரல்: பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது, ஆள்காட்டி விரல். இந்த விரலுக்கு அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்வது, உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தை குறைக்கிறது. இது, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர் வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது

நடு விரல்: நடு விரலுக்கு அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்வது, உங்களது கோபத்தை குறைக்க செய்கிறது. தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, தலைவலி ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடைய இந்த விரலானது, அதன் பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது

மோதிர விரல்: ஏறத்தாழ கட்டை விரலுடன், ஒத்துப் போவது தான், இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க, மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்யலாம். மேலும், மோதிர விரல், நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. சுவாச கோளாறுகளை போக்கவல்லது. நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடல் சக்தி மேம்படும்

சிறு விரல்: சிறு விரலுக்கு அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்வது, இதயம் மற்றும் ரத்த ஓட்டத்திற்கு நல்லது. ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதர உடல் பாகங்களின் செயல் திறனை ஊக்குவிக்கிறது. மேலும், மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது. இதனால், உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்

உள்ளங்கை: மன அழுத்தம் தான், அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய்; ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து, பயிற்சி செய்வது, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது. மேலும், உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து, விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது.

- புஷ்பலதா.






      Dinamalar
      Follow us