/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
புகைப்படத்தின் விலை, 21 லட்சம் ரூபாய்!
/
புகைப்படத்தின் விலை, 21 லட்சம் ரூபாய்!
PUBLISHED ON : நவ 29, 2015

கடந்த, 1912ல், பிரிட்டனில் இருந்து, அமெரிக்காவுக்கு சென்ற, 'மிதக்கும் சொர்க்கம்' என அழைக்கப்பட்ட, 'டைட்டானிக்' கப்பல், நடுக்கடலில், பனிப் பாறையில் மோதி, மூழ்கியது. இந்த விபத்தில், 1,500 பேர் இறந்தனர். கப்பல் மூழ்கிய இடத்தில், மீட்கப்பட்ட பொருட்கள், அவ்வப்போது ஏலம் விடப்படுகின்றன. அந்த கப்பலின், முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட, 'மெனு கார்டு' சமீபத்தில், பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த, பனிப்பாறையின் கறுப்பு - வெள்ளை புகைப்படம், 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த அடுத்த நாள், அதே வழியில் சென்ற, மற்றொரு கப்பலில் இருந்த ஒருவர், அந்த பனிப்பாறையை படம் எடுத்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புகைப்படம், சமீபத்தில் தான் ஏலம் விடப்பட்டுள்ளது.
— ஜோல்னாபையன்.

