sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பட்டாம்பூச்சிகளின் கதை! (18)

/

பட்டாம்பூச்சிகளின் கதை! (18)

பட்டாம்பூச்சிகளின் கதை! (18)

பட்டாம்பூச்சிகளின் கதை! (18)


PUBLISHED ON : அக் 09, 2011

Google News

PUBLISHED ON : அக் 09, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வணக்கம் வாசக, வாசகியர்களே... இன்றைய பட்டாம்பூச்சியின், 'டாபிக்' என்ன தெரியுமா?

'சின்னத்திரை மோகம்!'

இன்றைய தினத்தில், எந்த பெண் அழகாக இல்லை என்று சொல்லுங்களேன்... அசிங்கமான பெண்கள் கூட, டைட் - பிட்டிங் சுடிதார் அணிந்து, புருவங்களைத் திருத்தி, 'ஹேர் அயர்னிங் செய்து, அலங்கரித்து, ஏதோ ஒரு விதத்தில் மிகவும் கவர்ச்சியாக தோன்றுகின்றனர்.

இது நல்ல விஷயம் தான். ஆனால், இன்றைய இளைஞர்களின் தாக்கமே பணம், பணம் தான். மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் விரும்புகின்றனர். எல்லாருமே காரில் போகணும், கைநிறைய கட்டுக்கட்டாக பணத்துடன், ஷாப்பிங் செய்யணும், மிகப் பெரிய ரெஸ்டா ரென்டில் சாப்

பிடணும் என்றே விரும்புகின்றனர்.

சினிமாவில் காட்டப்படும் கதாநாயக, நாயகிகளின் படாடோப வாழ்க்கை, இவர்கள் மனதை ஆக்கிரமித்துக் கொள்வதுதான், இதற்குக் காரணம். இந்த ஆடம்பர வாழ்க்கைக்காக, எதையும் செய்ய தயாராக உள்ளனர். இதற்கு ஒரே வழி, பணம் கொழிக்கும் சின்னத்திரை, சினிமா, மாடலிங், காம்பியரிங், ஈவென்ட் மேனேஜ் மென்ட் என்ற கவர்ச்சி உலகம் என்பதை புரிந்து வைத்திருக்கின்றனர். இந்த உலகமும் இவர்களை, 'வா... வா...' என, வரவேற்கிறது.

எனக்கு தெரிந்த குடும்பத்தினர் வீட்டுக் குழந்தை, மிகவும் அழகாக இருப்பாள். விதவிதமாக டிரஸ் செய்து, பெண் குழந்தையை, ரசித்து, ரசித்து வளர்த்தனர். தெரிந்தவர் மூலம், 'டிவி' சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உறவினர்கள், வீட்டு பெரியவர்கள், 'வேண்டாம்...' எனத் தடுத்தும் கேளாமல், 'டிவி' சீரியலில் நடிக்க அனுமதித்தனர். அழகான அந்த பெண் குழந்தையின் துறுதுறுப்பான நடிப்பை பார்த்து, பல சீரியல்கள், 'புக்' ஆகின.

பள்ளியில் இந்தப் பெண்ணுக்கு ஹீரோயின் அந்தஸ்துதான். நண்பிகள் எல்லாரும் தூக்கி வைத்துக் கொண்டாடினர். சிறுவயதிலேயே கிடைத்த பணமும், புகழும் இவரின் மண்டையை ஆக்ரமித்தது. 'டீன்-ஏஜ்' பருவம் வந்ததும், 'சினிமா உலகம் வேண்டாம்...' என்றனர் பெற்றோர். அந்த உலகத்தின், புகழ் ஆடம்பர போதையில் மூழ்கிய பெண், வேண்டாம் என்றால் கேட்பாளா?

'நான் சினிமா மற்றும் 'டிவி' சீரியல்களில் நடித்தே தீருவேன்...' என அடம்பிடித்து, பெரிய திரையில் நுழைந்தார். இவர் நினைத்த மாதிரி பெரிய திரை உலகில் மின்ன முடியுமா? முடியவில்லை. ஆனாலும், கவர்ச்சி உலகத்துக்கே உரிய எல்லா பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொண்டார்.

பெற்றோரை திட்டி, துரத்தியும் விட்டு, தனியாக பிளாட்டில் வசிக்கிறார். சின்னத்திரை தான் கை கொடுக்கிறது. அதில் வரும் போட்டிகள், நடனப் போட்டிகளில் கலந்து கொண்டு, பாய் பிரண்ட்ஸ், பார்ட்டி, டிஸ்கோத்தே என வாழ்க்கையை, 'என்ஜாய்' பண்ணுகிறார். பெற்றோர், தங்கள் மகளின் வாழ்க்கை இப்படி சீரழிந்து போனதை எண்ணி கலங்கி தவிக்கின்றனர். வேறு என்ன செய்ய முடியும்?

இன்னொரு குடும்பத்திலும், அப்படித்தான் நடந்தது.'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' என்ற பெயரில், புது கலாசாரம் கிளம்பி உள்ளது.

அதாவது பெரிய, பெரிய விழாக்களுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசு கொடுப்பதற்காக, 'ட்ரே'யில் பரிசு பொருட்களை எடுத்து வருவதற்கு, அழகான பெண்களை அனுப்புவது இவர்களது வழக்கம்.

இந்தப் பெண்கள் அழகாக டிரஸ் செய்து, விழாக் களில் பங்கேற்பர். அதன் பிறகு தகாதவர்களிடம் சிக்கி சீரழிகின்றனர். இதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்களை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும் பெற்றோர்.

இன்னொரு இளம்பெண், சின்னத்திரையில் நடக்கும் நடனப் போட்டியில் நடனம் ஆடச் சென்றாள். இவள் குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம். நன்றாக நடனம் ஆடுவாள். பெற்றோரை பாடாய் படுத்தி, அவர்களை பிடித்து, இவர்களைப் பிடித்து, நடனக்குழுவில் இடம்பெற்றாள். இவர்கள் குழுவிற்கு பரிசும் கிடைத்தது. அங்கு கிடைத்த தொடர்புகளை வைத்து, சினிமாவில் டான்ஸ் ஆடுவது, சின்னச் சின்ன காட்சிகளில் தலை காட்டுவது இவரது வேலை.

அதற்குள் இந்த இளம் பெண்ணின் நடவடிக்கையே மாறி விட்டது. 17 - 18 வயதுதான் இருக்கும். ஷார்ட்ஸ், பனியன் போட்டு, ஒரு மொபைல்போனை காதில் வைத்து, தெரு முழுவதும் சுத்துவது...

'மேக்-அப்' போட்டு, சம்பாதிக்கும் பணத்தை ஆடம்பர தேவைகளுக்கே செலவழிப்பது...

பெற்றோரை மதிப்பதே இல்லை. அவர்களுக்கு ஒரு பைசா கூட கொடுப்பதில்லை. இந்த பெண்ணின் நடவடிக்கையால், பெற்றோர் தலைகுனிந்து நிற்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன், நம்மை சிரித்து, சிரித்து மகிழ்வித்த, 18 வயது இளம் காம்பியரிங் மற்றும் சின்னத்திரையின் சீரியல் நடிகை ஒருவர், தற்கொலை செய்து கொண்டார். அதற்கு, 'குரூப் செக்ஸ்' என்ற கொடுமையில், அவர் சிக்கிக் கொண்டதே காரணம். இவற்றை பத்திரிக்கையில் படித்து, நாம் எல்லாரும் நொந்து போகவில்லையா?

இன்னொருவர், ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டு, மாடலிங், பாய் பிரண்ட், போதை மிரட்டல் என கேவலப்பட்டு, சிறைக்குச் சென்றதை பற்றியும் நாம் பத்திரிகையில் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பெற்றோரே... இது, அழகும், அறிவும் பெருகிப் போன காலம். எல்லா குழந்தைகளுமே அழகாகத்தான் இருக்காங்க... அதற்காக உடனே, இறக்கை கட்டி பறந்து, 'சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர், சூப்பர் அழகி போட்டிக்கு என் மகளை தயார் செய்கிறேன்...' என்று, அவர்களின் இளம் மனதில் நஞ்சை கலந்து, சினிமா ஆசைகளை விதைத்து, அவர்கள் வாழ்க்கையை கருக்கி விடாதீர்.

நல்ல படிப்பு கொடுங்க... பிள்ளைகள், திறமைகளை தங்கள் பள்ளிகள், கல்லூரிகளில் காட்டட்டும். பிறகு, நம் பண்பாடு மாறாத வகையில், திருமணம் செய்து வைத்து, அவர்களை சிறப்பாக வாழ வையுங்கள்.

தேவையற்ற, 'சினிமா மோகம்' வேண்டவே வேண்டாம்!

தொடரும்.

ஜெபராணி ஐசக்






      Dinamalar
      Follow us