
ஒரு பெண் நிர்வாகம் செய்தால்...
ஆட்டோ மொபைல் உதிரி பாகங் கள் விற்பனை செய்யும், எங்கள் நிறுவனத்துக்கு வரும் வாடிக்கை யாளர்களில் பலர், ஒர்க்ஷாப் ஊழியர், டிரைவர், புரோக்கர்கள். அவர்களில் பெரும்பாலானோர், குடிபோதையில் வருவர்; நாகரிகமற்று பேசுவர். இத னால், எங்கள் மேனேஜர், வேலையை விட்டே சென்று விட்டார்.
புதிய மேனேஜர் பொறுப்பை ஏற்க, யார் வரப் போகிறார் என்பதில், நாங் கள் ஆர்வமாய் இருந்தோம். ஒரிரு தினங்களுக்கு பின், எங்களுக்கு அதிர்ச்சி. புதிதாக வந்த மேனேஜர், ஒரு இளம் பெண். பட்டதாரியான அப் பெண்ணிடம், நிர்வாகத் திறமையும், எதையும் சந்திக்கும், சமாளிக்கும் திறனும் இருந்தது. குடிபோதையில் வரும் வாடிக்கையாளர்கள் கூட, பண்போடு பேசி, 'பர்சேஸ்' செய்து விட்டு சென்றனர்.
வாடிக்கையாளரின் தேவையை அறிந்து, அவர்களின் நிறை, குறை களை ஏற்று, பக்குவமாய் பேசி, சுமூகமாய் அப்பெண் விற்பனையை அதிகரிக்க செய்தது, எங்கள் எல்லாருக்கும் ஆச்சரியமே!
இதைக் கண்ட எங்கள் நிறுவனத்தின் மூத்த ஊழியர் ஒருவர், 'உளவியல் ரீதியாக, ஒரு ஆணிடம் அடாவடியாக, அனாவசியமாக வாதம் செய்யும் சிலர், நிச்சயமாக ஒரு பெண்ணிடம் அது போல நடந்து கொள்வதில்லை; தவறான வார்த்தை களை பயன்படுத்துவதுமில்லை. அவர்களின் தேவை நிறைவேறினால், திருப்தியாக சென்று விடுகின்றனர்...' என்றார்.
உண்மைதான்... எந்த எதிர் பார்ப் பும் இன்றி, நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதில் ஆண்களை விட, பெண்களே பொருத்தமானவர். அதி லும், சற்று அனுபவம் பெற்று விட்டால், யாரையும் ஆட்டிப்படைத்து, நினைத்ததை சாதித்து விடுவர் என்பது புரிந்தது.
— பி.நேதாஜி, அரசரடி.
விழா புகைப்படங்களில், கவனம் தேவை!
என் தோழியின் திருமண வரவேற்புக்குச் செல்ல இயலாததால், பின்னொரு நாள், அவள் வீட்டுக்குச் சென்று, பரிசுப் பொருள் கொடுத்து, அவளையும், அவள் கணவரையும் வாழ்த்தி வரச் சென்றிருந்தேன்.
எனக்கு ஸ்வீட், காரம், காபி வழங்கிய தோழி, தன் திருமண வரவேற்பு புகைப்பட ஆல்பத் தைத் தர, அதைப் புரட்டிப் பார்த்தேன்.
பெரும்பாலான புகைப் படங் கள் நன்றாக இருக்க, ஒரு சில புகைப்படங்களில் பெண் களின் தோற்றம், சற்று பார்க்கத் தகாதபடி இருந்தது. முந்தானை விலகிய நிலையிலும், இடது புறமாக, 'சைடு போஸ்'சில் நிற்கும் பெண்களின் மார்பு பகுதி தெரியும் வகையிலும், இடுப்புக்குக் கீழே, 'ப்ளிட்ஸ்' பகுதியில் கை வைத்தபடியும் புகைப்படம் அமைந்திருந்தது.
இந்தப் புகைப்படங்களை தோழியிடம் சுட்டிக்காட்டிய நான், ஜொள்ளுப் பார்ட்டிகளின் பார்வையில் இந்தப் புகைப்படங்கள் படும்போது, எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் என்பதைக் குறிப்பிட்டு, இப்புகைப்படங்களை உடனடியாக ஆல்பத்திலிருந்து நீக்குமாறு அறிவுறுத்தினேன். புரிந்து கொண்ட தோழியும், அப்போதே படங்களை ஆல்பத்திலிருந்து அகற்றினாள்.
திருமண வரவேற்பு, பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொள் ளும் பெண்கள், உடைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆல்பம் தயாரிப்போரும், முந்தானை மற்றும் துப்பட்டா விலகிய புகைப்படங்களை, ஆல்பத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
— கே.ரேணுகா நடராஜன், அம்பாசமுத்திரம்.
அந்த மூன்று நாட்கள்!
என் தங்கைக்கு, சமீபத்தில் வயதுக்கு வந்த மகள் உண்டு; பள்ளியில் பயின்று வருகிறாள். பள்ளியில் பாடம் படிக்கும் போது, அவளுக்கு திடீரென, 'அந்த' மூன்று நாள் பிரச்னை வந்ததால், அதற்கு என நியமிக்கப்பட்ட ஆசிரியை யை சந்திக்க சொல்லி இருக்கின்றனர்.
அந்த ஆசிரியை, 'சானிட்டரி நாப் கின்' வழங்கி உதவியதோடு, எப்படி அதை பயன்படுத்த வேண்டும். 'அந்த' மூன்று நாட்களில் மாணவியின் மன நிலை எப்படி இருக்கும், எப்படிப்பட்ட வேலைகள் செய்ய வேண்டும் போன்ற நல்ல விஷயங்களை விரிவாக சொல்லிக் கொடுத்துள்ளார். இப்படி சொல்லிக் கொடுப்பது, வயது வந்த பெண்ணுக்கு, பயத்தைப் போக்குவதோடு, விழிப்புணர்வையும், தைரியத்தையும் தருகிறது.
பெற்ற மகளிடம் இது போன்ற விஷயங்களை, பெற்றோரால் சரியாக சொல்ல முடியாது; சங்கோஜ நிலை ஏற்படும். ஆனால், ஆசிரியர் சொன்னால், மாணவிகளுக்கு வேதவாக்கு. பசுமரத்து ஆணி போல் மனதில் பதியும்.
மற்ற பள்ளிகளிலும், ஆசிரியைகள், இது போன்ற விஷயங்களை மாணவிகளுக்கு சொல்லிக் கொடுக் கலாமே!
— செல்வி அருண், சிவராமபேட்டை.

