/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தாத்தாவை கவனிக்க, 'ரோபோ' வந்தாச்சு!
/
தாத்தாவை கவனிக்க, 'ரோபோ' வந்தாச்சு!
PUBLISHED ON : நவ 29, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூரில், மூத்த குடிமக்களுக்கு அதிக மரியாதையும், முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அங்கு வசிக்கும் முதியவர்கள் எண்ணிக்கை, ஒன்பது லட்சத்தை தொட்டுவிடும் நிலை உள்ளதால், அவர்களை கவனித்துக் கொள்ளவும், சிறு சிறு உதவிகளை செய்யவும், ரோபோக்களை பணியமர்த்த, சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
அங்குள்ள ஒரு நிறுவனம், இதற்காகவே,'ரோபோகச்' என்ற பெயரில், சில ரோபோக்களை தயாரித்துள்ளது. உடற்பயிற்சி செய்ய மற்றும் பொருட்களை எடுத்து கொடுக்க இந்த ரோபோக்கள் உதவுமாம். விரைவில், சிங்கப்பூரில் உள்ள மூத்த குடிமக்கள் மையங்களில், இந்த ரோபோக்களை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
— ஜோல்னாபையன்.

