/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இன்சூரன்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி
/
இன்சூரன்ஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி
PUBLISHED ON : ஏப் 04, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அறிவிக்கும் போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவிலிருந்து விண்ணப்பிப்பவருக்கு தேர்வுக்கான இலவச பயிற்சியை தருகின்றன.
சமீபத்தில் கிளார்க் பணிக்கான பணியிடங்களை அறிவித்த பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வரும் ஏப்ரல் 5 முதல் 7 வரை இந்த போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியை தரவுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு இந்த இலவச பயிற்சி நடத்தப்படவுள்ளது. இதில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் மேற்குறிப்பிட்ட பிரிவினர் மதுரையில் உள்ள இதன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

