/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேண்டுமா
/
மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேண்டுமா
PUBLISHED ON : ஏப் 04, 2017

குஜராத்தில் செயல்படும் மெட்ரோ லிங்க் எக்ஸ்பிரஸ் பார் காந்தி நகர் அண்டு ஆமதாபாத் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள 606 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: ஸ்டேஷன் கன்ட்ரோலர்/டிரெய்ன் ஆபரேட்டர்பிரிவில் 283ம், கஸ்டமர் ரிலேஷன்ஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 31ம், ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் 99ம், மெயின்டெய்னர் பிரிவில் 193ம் சேர்த்து மொத்தம் 606 இடங்கள் காலியாக உள்ளன.
வயது: இந்த பணியிடங்களில் முதல் மூன்று பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மெயிண்டெய்னர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஸ்டேஷன் கன்ட்ரோலர்/டிரெய்ன் ஆபரேட்டர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முடித்திருக்க வேண்டும்
கஸ்டமர் ரிலேஷன்ஸ் அசிஸ்டென்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக இயற்பியல், வேதியியல் அல்லது கணிதப் புலத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஜூனியர் இன்ஜினியர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ்,சிவில் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
மெயின்டெய்னர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பின்னர் ஐ.டி.ஐ., படிப்பை பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 ஏப்., 30.
விபரங்களுக்கு: http://www.gujaratmetrorail.com/careers/

