/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நாட்டுக்கோழி வளர்க்க ஏனாத்துாரில் 25 நாள் பயிற்சி
/
நாட்டுக்கோழி வளர்க்க ஏனாத்துாரில் 25 நாள் பயிற்சி
PUBLISHED ON : நவ 12, 2025
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை இணைந்து, 'நான் முதல்வன், -வெற்றி நிச்சயம்' திட்டங்களின்கீழ், 25 நாட்கள் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடத்த உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நவ., 17ல் இருந்து நடக்கும் பயிற்சிக்கு, 18 - 35 வயது வரை வரையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்.
குறிப்பாக, தினசரி பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு பதிவு செய்வதால், ஆதார் எண் மற்றும் போட்டோ ஆகிய ஆவணங்களுடன், www.tnskill.gov.in என்ற இணைய தள முகவரியில், முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, 97907 53594.

