/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
25 சதவிகித மானியம்: ரூ.25 லட்சம் கடன்
/
25 சதவிகித மானியம்: ரூ.25 லட்சம் கடன்
PUBLISHED ON : ஜூன் 20, 2018

கிராமங்களில் நடத்தப்படும் சிறு, குறு, கிராம தொழில்கள், கைவினைஞர்களுக்கான கொள்கைகளை வகுத்து செயல்படும் துறை, விவசாயம் மற்றும் கிராமப்புற தொழில்கள் அமைச்சகம், காதி கிராம தொழில் வாரியம், கயிறு வாரியம் மூலமாகவும், பிரதமரின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தை நடைமுறை படுத்துவதன் மூலம் பல கோடி பேருக்கு இத்துறை உதவி வருகிறது.
பயிற்சி, கடன், மார்க்கெட் உதவி, தொழில்நுட்ப மேம்பாடு, பொது பயன்பாட்டு உதவி மையம், தர மேம்பாடு, என பல துறைகளில் பல நடவடிக்கைகளை எடுத்து பல கோடி ரூபாய் விவசாயம், கிராமம் சார் தொழில்கள் உருவாக, மேம்பட, வேலை வாய்ப்பு பெருகிட உதவி வருகிறது.
தனக்கு வரும் கடிதங்களை 15 நாட்களுக்குள் பதில் தருகிறது. புது டில்லிக்கு நேரில் வரும் தொழில் முனைவோருக்கு தனியே தகவல் தரும் மையத்தை உருவாக்கி உள்ளது.
கிராமப்புற வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அமல்படுத்தி 25 லட்சம் ரூபாய் வரை கடனுதவி அளிக்கிறது. 25 சதவிகிதம் மானியமும் அளிக்கிறது.
இத்திட்டத்தில் ஆண்டு தோறும் 25 ஆயிரம் பேர் வரை கடன் பெறுகின்றனர். இதில் 25 சதவிகிதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபரங்களுக்கு 'Ministry of Agro and Rural Industries, 275, Udyog Bhavan, New Delhi,'ல் தொடர்பு கொள்ளலாம்.
போன்: 011- 2306 2219.
- எம். ஞானசேகர்
விவசாய ஆலோசகர் சென்னை.
அலைபேசி: 93807 55629

