/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மா மரங்களை தாக்கும் ஆந்த்ரக்னோஸ் நோய்
/
மா மரங்களை தாக்கும் ஆந்த்ரக்னோஸ் நோய்
PUBLISHED ON : ஜூன் 13, 2018

ஆந்த்ரக்னோஸ் நோய் இலைகளில் புள்ளிகளையும் மலர் மற்றும் கிளை நுனிகளில் கருகல் தன்மையையும் மற்றும் பழங்களில் அழுகல் நிலையையும் ஏற்படுத்துகிறது. இலைகள் மற்றும் கிளைகளில் சிறிய கொப்பளம் தோன்றும். இளம் இலைகள் தளர்ந்து உலர்ந்து உதிர்ந்து விடும். பழங்களில் கருப்பு புள்ளிகள் தோன்றி கடினமாகி சிதைவு அடைந்து விடும்.
நோய் பரவும் விதம்
பூக்கும் மற்றும் பிஞ்சு, காய் பருவத்தில் பெய்யும் மழை, இந்நோய் பரவ சாதகமாக அமையும். பூசண வித்துக்கள் காற்றின் மூலமும் பரவுகின்றன. பிஞ்சு மற்றும் காய்களில் கண்ணுக்கு தெரியாத காயங்கள் உண்டானால் இந்நோய் அதிகம் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
மா மரத்தில் இலைகள், கிளைகள், பூங்கொத்துக்கள் மற்றும் பிஞ்சுகளை பாதிக்கும் ஆந்த்ரக்னோஸ் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் மாங்கோசெப் 2 கிராம் அல்லது கார்பென்டசிம் ஒரு கிராம் அல்லது தயோபேனேட் மீதைல் ஒரு கிராம் அல்லது குளோரோதலோனில் 2 கிராம் வீதம் தெளிக்க வேண்டும்.
மருந்து கரைசல் பூங்கொத்துக்கள், கிளைகள், இலைகள், பிஞ்சுகளில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான், பைட்டோவெட், ஸ்டிக்கால் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்க வேண்டும்.
முதிர்ந்த காய்களை
அறுவடை செய்யும் முன் மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து பழங்களில் தோன்றும் அழுகலை கட்டுப்படுத்தலாம்.
- டாக்டர் ரா.விமலா, தலைவர்
பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிபுத்துார்.

