/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மலர்களின் மதிப்பூட்டம் - பூங்கொத்து தயாரித்தல்
/
மலர்களின் மதிப்பூட்டம் - பூங்கொத்து தயாரித்தல்
PUBLISHED ON : மார் 21, 2012

மலர்களை அறுவடை செய்தபின் சுவாசித்தல் மூலம் சேமித்து வைக்கப்பட்டுள்ள சக்தி மற்றும் உணவுகள் பெருமளவு பயன்படுத்தப்பட்டு விடுகிறது. இதனால் மலரின் தரம் பாதிக்கின்றது. குளிர்ந்த வெப்பநிலையில் மலர்களை சேமிக்கும்போது சுவா சித்தலின் வேகத்தைக் கட்டுப் படுத்தலாம். இதன்மூலம் சுவாசித்தலினால் ஏற்படும் சக்தி இழப்பை தடுக்கலாம். மலர் களை அறுவடை செய்யும் போது நன்கு விளைந்த ஆனால் முழுவதும் மலராத மலர்களையே அறுவடை செய்ய வேண்டும். ஒவ்வொரு மலர்களையும் அறுவடை செய்யும் பருவம் நிபுணர் களால் கண்டறியப்பட்டு உள்ளது. அறுவடைக்குப் பின் மலர்களை சேமிக்கும் பொழுதும், சந்தைகளுக்கு அனுப்பும் பொழுதும் மலர்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் காயம் ஏற்படுகிறது. இது மலர்களின் வாழ்நாளை பாதிக்கும். மேலும் மாசு படர்ந்த மற்றும் அதிக தாது உப்புகள் கொண்ட நீர் மலர்களின் தரத்தினை பாதிக்கக்கூடியவை. எனவே இவற்றையும் தவிர்க்க வேண்டும்.
பூங்கொத்துகளில் வைக்கப்படும் மலர்கள் அதிக வாழ் நாளை கொண்டதாக இருக்க வேண்டும். எனவே ரோஜா, கார்னேஷன், அந்தூரியம், லில்லியம், ஜெர்பிரா போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 45-60 செ.மீ. நீளமுள்ள காம்புகளுடன் கூடிய மலர்களை பூங்கொத்துக்கு பயன்படுத்தலாம். மலர்களுடன் அதனை நிரப்புவதற்காக அழகு இலைகளை பயன்படுத்தலாம். மலர்க்கொத்து தயாரிப் பதற்கு முன் தேர்வு செய்த மலர்களில் தண்டின் அடிப் பாகத்தில் உள்ள இலைகளை நீக்கிவிட வேண்டும். பின்னர் மலர்களின் தண்டுகளை சாய்ந்த கோணத்தில் தண்டுகள் சேதமடையாதவாறு வெட்டி நன்கு நீரை உறிஞ்சிக் கொள்ளும்படி தண்ணீர் நிரப்பியுள்ள குடுவையில் வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மலரை தரம் பிரிக்கும் இடங்களிலும் சேமிக்கும் அறைகளிலும் பூச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட அழுகிய செடியின் பாகங்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பூங் கொத்து செய்ய பயன்படும் கருவிகள், வாளி ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்தபிறகே உபயோகிக்க வேண்டும்.
சாதாரண மலர்க் கொத்துகள் தயாரிப்பதற்கு பின்னணியாக இலை தாவரங்களை 2 முதல் 3 செ.மீ. தடிமனுக்கு அடுக்க வேண்டும். இதற்கு அலங்கார பனை இலைகள், தூஜா இலைகள் பயன்படுத்தப் படும். இந்த மலர்கொத்துகள் வட்டம் அல்லது நீள்வட்ட வடிவத்தில் அமைக்கப்படும். இதற்கு கிளாடியோலஸ், கொய் ரோஜா, ஆஸ்டர், கோல்டன் ராட், கார்னேஷன், ஜெர்பிரா முதலிய மலர்களை பயன்படுத்தலாம். இலைத் தாவரங்களையும், மலர்களை யும் கலை நுணுக்கத்துடன் அடுக்கி, அடர்நிற பூக்கள் கீழேயும், லேசான வண்ணம் கொண்ட பூக்கள் மேலேயும் இருக்க வேண்டும். பெரிய அளவு கொண்ட பூக்கள் கீழ்ப்பகுதியிலும், சின்னப் பூக்கள் மேல்பகுதியிலும் வைக்க வேண்டும். பெரிய அளவு கொண்ட ஒரு மலரை நடுவாக வைக்க வேண்டும். இவ்வாறாக அழகாக பொருந்தி இருக்குமாறு செல்லோபேன் பேப்பர் கொண்டு பொருத்தி பின்னர் அழகிய கண்ணாடிதாள் கொண்டு பொதிய வேண் டும். அடியில் மலர்களை நூலால் கட்டி அவற்றின் மேல் அலுமினிய தாள் கொண்டு பொதிந்து அழகிய சாட்டின் ரிப்பன்களை கட்ட வேண்டும். தொடர்புக்கு: ரா.சுவர்ண ப்ரியா, இணை பேராசிரியர் மற்றும் தலைவர், தோவாளை, மொபைல்: 94431 18008.
கே.சத்தியபிரபா, உடுமலை

