PUBLISHED ON : அக் 30, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசில் இன நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை உதவிப் பேராசிரியர் சபாபதி கூறியதாவது:அசில் இன நாட்டுக்கோழி, நல்ல வருவாய் கிடைக்கக்கூடிய நாட்டுக்கோழி வளர்ப்பாகும். இது, பிற நாட்டுக்கோழி இனத்தை காட்டிலும், சற்று வேறுபாடு உடையவை.சாதாரண நாட்டுக்கோழிகள், ஆண்டிற்கு, 60 முட்டை வரையில் போடும். ஒரு அசில் இன நாட்டுக்கோழி ஆண்டிற்கு, 200 முட்டை வரையில் போடும்.இதுபோன்ற ரக கோழி வளர்த்தால், தீவனம் மற்றும் பராமரிப்பு செலவினம் போக, ஒரு கோழி மீது, 800 ரூபாய் வரையில் வருவாய் கிடைக்கும்.சிறு பண்ணையாக, 500 கோழிகளை வளர்த்து வந்தால், ஒரு ஆண்டிற்கு, 4 லட்சம் ரூபாய் வரையில், எளிதாக வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 94424 85691.

