/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
50 ஆண்டு வருவாய்க்கு கோகோ சாகுபடி
/
50 ஆண்டு வருவாய்க்கு கோகோ சாகுபடி
PUBLISHED ON : ஜூலை 23, 2025

கோ -கோ சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவணிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கஸ்துாரி பண்ணை முன்னோடி விவசாயி எம்.சீனிவாசன் கூறியதாவது:
தென்னந்தோப்பில், கோ-கோ ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன். ஐந்து ஆண்டுகளுக்கு பின், மகசூல் கொடுக்க துவங்கும். அதன்பின், ஒவ்வொரு ஆண்டு சீசனுக்கு கோகோ மகசூல் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் கோகோவை உலர்த்தி விற்பனை செய்யலாம். சாக்லேட் ஏற்றவாறு மதிப்பு கூட்டி தயாரித்து விற்பனை செய்யலாம்.
குறிப்பாக, கோகோ மரத்தை ஒரு முறை சாகுபடி செய்து, முறையாக உரம் மற்றும் நீர் நிர்வாகம் செய்து வந்தால், 50 ஆண்டுகளுக்கு வருவாய் தரும் சாகுபடியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எம்.சீனிவாசன்,
89394 63887.

