/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
வறட்சியிலும் வளம் காணும் பேரீச்சை சாகுபடி
/
வறட்சியிலும் வளம் காணும் பேரீச்சை சாகுபடி
PUBLISHED ON : ஆக 21, 2013

தமிழகத்தில் தற்பொழுது பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு மட்டுமல்லாமல் விவசாய பயிர்கள் காய்ந்து கருகிப்போனதுடன் பல ஆண்டுகள் பராமரித்து வந்த தென்னை மரங்களும் வறட்சியை தாங்கும்மா, போன்ற மரங்களும் காய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வறட்சியான இயற்கை சீற்றத்தையும் எதிர்கொண்டு தர்மபுரி பேரீச்சை பண்ணையில் மரங்கள் காய்ந்து குலைகுலையாய் மக்கள், பொன்னிறங்களில் மரத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கிறது. கடும் வறட்சியில் பேரீச்சை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி 3 மாதங்களுக்கு மேலாகிறது. இருப்பினும் வறட்சியை கண்டுகொள்ளாமல் மரங்கள் பசுமையாக உள்ளது. பேரீச்சையை பொறுத்தவரையில் இதைவிட வரலாறு காணாத வறட்சி வந்தாலும் மரம் காய்ந்து போவதற்கு வாய்ப்பே இல்லை. பேரீச்சை செடிகளை நடவு செய்து ஒரு வருடம் வரை பராமரித்துவிட்டாலே போதும். வறட்சியால் மரம் இறந்துபோக வாய்ப்பில்லை. எனவே வறட்சியிலும் தொடர்ந்து வளமான வருமானம் தரும் பயிர் பேரீச்சைய தவிர வேறெந்த பயிரும் இருக்காது.
பேரீச்சை பண்ணையில் தற்பொழுது உலக தரம் வாய்ந்த பேரீச்சை ரக பழங்கள் மகசூலில் உள்ளது. பரி ரக திசுவளர்ப்பு கன்றுகள் நடவுசெய்ய தயார் நிலையில் உள்ளது. பேரீச்சை பண்ணையில் தற்பொழுது விதை கன்றுகள் வினியோகத்தை தவிர்த்துவிட்டு நவீன திசுவளர்ப்பு தொழில்நுட்பத்தில் ஆய்வகத்திலும் நர்சரியிலும் 4 ஆண்டு வயதுள்ள கன்றுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. அவை நடவு செய்து 2 ஆண்டு நிறைவில் மகசூலுக்கு வந்துவிடுகிறது. முதல் வருட காய்ப்பிலேயே முதலீட்டு பராமரிப்பு செலவையும் எடுத்துவிட்டு லாபத்தையும் பார்க்கலாம். தொடர்ந்து 90 ஆண்டுகள் வரை அதிக அளவில் நிரந் தர வருமானம் பெறலாம். எனவே பல ஆண்டுகள் பராமரித்து வறட்சியால் பெரிதும் பாதிக்கப்படும் தென்னை, மா பயிர்களுக்கு பதிலாக பேரீச்சை பயிரிட்டு வாழ்நாள் முழுவதும் நிம்மதியான வாழ்வாதாரத்தை பெறலாம். தொடர்புக்கு: நிஜாமுதீன், 04342-243 567, 243 202, 292 840, 0 94423 37717.
-கே.சத்தியபிரபா, உடுமலைப்பேட்டை.

