sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கடல் பொருள் ஏற்றுமதி கணிசமான லாபம்

/

கடல் பொருள் ஏற்றுமதி கணிசமான லாபம்

கடல் பொருள் ஏற்றுமதி கணிசமான லாபம்

கடல் பொருள் ஏற்றுமதி கணிசமான லாபம்


PUBLISHED ON : அக் 30, 2019

Google News

PUBLISHED ON : அக் 30, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில் 1938, 39ல் கடல் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. உலர்ந்த, உப்பிட்ட, கடல் விலங்கு மற்றும் தாவரங்கள் ஏற்றுமதியாகின. ஹாங்காங், சிங்கப்பூர், பர்மா மற்றும் இலங்கைக்கு அதிகமாக உலர் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1945, 46ல் ரூ.2 கோடியே 69 லட்சம் மதிப்பில் 21.874 டன்கள் ஏற்றுமதியாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து 22 நாடுகளுக்கு 1962 ல் காய்ந்த இறால் 3,067 டன் அதாவது ரூ.89 லட்சத்துக்கு ஏற்றுமதியாகியுள்ளன. இதில் பாதி பர்மாவிற்கு ஏற்றுமதியாகின.

உலகிலேயே இந்தியா மீன் உற்பத்தியில் எட்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி டன் மீன் உற்பத்தியாகிறது. கானாங்கத்தி, சாளை, இறால், வாவல், நெய் மீன் உள்ளிட்ட பல வகை மீன்கள் இந்திய கடலில் உலா வருகின்றன. கடலோர பகுதியில் சுமார் 800 கி.மீ., துாரத்திற்கு கோடிக்கணக்கான மீன்களை மீனவர்கள் பிடித்து பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இந்தியாவில் மேற்கு கடற்கரை பகுதியில் மட்டும் நான்கில் மூன்று பங்கு மீன் உற்பத்தியாகிறது. படிப்படியாக கடல் மீன் வளத்தின் முன்னேற்றத்தால் ஏற்றுமதியில் புதிய திருப்பம் கிடைத்துள்ளது.

இந்திய அரசு கடல் பொருள் ஏற்றுமதியில் உயர்ந்த தரத்தை உருவாக்க தரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்ட 1964ல் கடல் பொருட்கள் சோதனை குழு அமைக்கப்பட்டது. சில பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் உள் வாரிய வரவு உள்ளது. ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு பதில் மூலப்பொருள்களை இறக்குமதி செய்ய உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கடல் பொருட்கள் ஏற்றுமதி வரலாற்றில் குளிர் பதன கடல் பொருட்கள் ஏற்றுமதி முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தியாவில் தற்போது கடல் பொருட்கள் ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

உறை குளிர் பதன இறால் ஏற்றுமதி அளவு 7.2 சதவீதம் உயர்வால் 8.7 சதவீதம் அதிக விலை கிடைத்துள்ளது. 1999 - 2000ல் மொத்த கடல் பொருட்கள் ஏற்றுமதியில் 7 சதவீதம் உறை குளிர் பதன இறால் ஏற்றுமதியாகும். வண்ண மீன் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. இறால் பொடி, குளிர்ந்த நண்டு, நண்டு ஓடு, உயிருள்ள நத்தை போன்றவையும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பான் சந்தைக்கு இறால் ஏற்றுமதி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இரண்டாவதாக ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ.155 கோடியே 66 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

- எம். ஞானசேகர்

விவசாய ஆலோசகர் சென்னை,

93807 55629






      Dinamalar
      Follow us