sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஆடுகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும் மூலிகை மருத்துவம்

/

ஆடுகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும் மூலிகை மருத்துவம்

ஆடுகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும் மூலிகை மருத்துவம்

ஆடுகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும் மூலிகை மருத்துவம்


PUBLISHED ON : நவ 20, 2019

Google News

PUBLISHED ON : நவ 20, 2019


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடுகளுக்கு மூலிகை மருத்துவம் செய்வதால் பக்க விளைவுகள் இருக்காது. கால்நடை பல்கலையின் இயற்கை மருத்துவ முறையில் குடற்புழு நீக்கம், மடிவீக்க நோய், சுவாசக் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

பூசணி விதை, வாதுமைக் கொட்டை, வெள்ளப் பூண்டு, காட்டுக்கடுகு, காட்டு கேரட் போன்றவை குடற்புழு நீக்கும் தன்மை உள்ளவை. பூண்டு, கொத்தமல்லி உடன் வேப்பிலை சேர்த்து ஆடுகளுக்கு கொடுத்தால் குடற்புழு நீங்கும். இதனால், தாய் ஆடு மட்டுமல்ல குட்டி ஆடுகளும் ஆரோக்கியமாகும். வெள்ளாடுகள் கசப்பு சுவையை விரும்புவதால் இந்த மருந்து நல்ல பலன் தரும்.

ஆண் ஆடுகளுக்கு இந்த சிகிச்சையில் வேப்பிலை சேர்த்தால் விந்தணு எண்ணிக்கையை குறைக்கும். இது தவிர குடற்புழுக்களை நீக்க கற்றாழை சாறு, விளக்கெண்ணெய், எலுமிச்சை விதை, உருளை கிழங்கு சாறு, மல்பெரி பழங்கள் பயன்படும்.

எலுமிச்சை விதைகளை அரைத்து தேன் கலந்து ஒரு கரண்டி வீதம் தினமும் கொடுக்கலாம். வாதுமைக் கொட்டை இலைகளை கையளவு எடுத்து கசாயமாக்கி தேன் கலந்து தரலாம். முசுக்கொட்டை பழங்களை ஒரு கையளவு தினமும் இரு வேளை கொடுக்கலாம்.

மடி வீக்க நோய்க்கு இஞ்சி, பூண்டு கொடுக்கும் போது மடியில் ரத்த ஓட்டம் துாண்டப்படும். சுவாசக் கோளாறுகளுக்கு இஞ்சி, பூண்டு, மிளகுக் கீரையை சமமாக கலந்து கொடுக்கலாம்.

ஆடுகளுக்கு பால் அதிகம் சுரக்க ஆல்பா ஆல்பா என்ற குதிரை மசால் தாவரம் தினமும் தரலாம். சினை ஆடுகளுக்கு குதிரை மசால் கொடுத்தால் குட்டி ஈனும் போது ரத்தப் போக்கு குறையும்.

- வி.ராஜேந்திரன்

முன்னாள் இணை இயக்குனர்

கால்நடை பராமரிப்புத் துறை

நத்தம். 73580 98090






      Dinamalar
      Follow us