/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
ஒருங்கிணைந்த தோட்ட பயிரிலும் வருவாய்
/
ஒருங்கிணைந்த தோட்ட பயிரிலும் வருவாய்
PUBLISHED ON : நவ 20, 2019

ஒருங்கிணைந்த தோட்டக்கலை பயிர் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி வி.வஜ்ஜிரம் கூறியதாவது:நான், 50 சென்ட் நிலத்தில், செவ்வரளி பூ, கத்திரி, மிளகாய், வெண்டை உள்ளிட்ட பலவித தோட்டக்கலை பயிர்களை நட்டு உள்ளேன்.ஒவ்வொரு காய்கறிக்கும், குறிப்பிட்ட நாட்களில் மகசூல்கொடுக்கும். அதன் பிறகு,மகசூல் குறைந்து விடும்.கத்திரி, வெண்டை, மிளகாய், பூ ஆகிய தோட்டக்கலை பயிர்களை இடைவெளி விட்டு பயிரிடலாம்.கத்திரியில் வருவாய் குறையும் போது, வெண்டையில் வருவாய் கொடுக்கும். வெண்டையில் வருவாய் குறையும் போது, மிளகாயில் வருவாய் கொடுக்கும்.
இவ்வாறு சுழற்சி முறையில் வருவாய் கிடைக்கும் போது, தினமும், 700 ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம். ஓராண்டிற்கு, 2.5 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.பராமரிப்பு மற்றும் பிற செலவினங்கள் போக, 1 லட்சம் ரூபாய் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 99430 63071

