sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

/

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை


PUBLISHED ON : ஏப் 04, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 04, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் முக்கியப் பயிர்களில் ஒன்றாக நிலக்கடலை விளங்குகிறது. வடமாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கிணற்றுப் பாசனம் மற்றும் மானாவாரியாகவும் பயிர் செய்யப்படுகிறது.

இந்தியாவில் 40 சதவிகிதம் பரப்பில் நிலக்கடலை பயிர் செய்கின்றனர். தமிழ்நாட்டில் 15 லட்சம் ஏக்கரில் நிலக்கடலை பயிரிடப்பட்டு இதர மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால் புழுக்கள், பூச்சிகள், இலைப்பேன்களால் நிலக்கடலைப் பயிர் தாக்கப்படுகின்றன. இலை சுருட்டுப்புழு, கம்பளிப் பூச்சிகள் இலைகளை சுரண்டி உண்ணும். இலைகள் உருவம் இழந்து காய்ந்து விட்டால் மகசூல் குறையும்.

விளக்குப்பொறி மூலம் அந்துப்பூச்சிகளை அழிக்க வேண்டும். பொறிகளுடன், ஒரு எக்டேருக்கு மாலத்தையான் 50 இ.சி., எனும் மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அசுவிணி எனும் பூச்சிகள் நிலக்கடலை மற்றும் பயிறு வகைகளையும் தாக்கும்.

சாறை உறிஞ்சுவதால் இலைகள் சுருண்டு விடும். ஒரு எக்டேருக்கு இமிடா குளோபிரிட் 17.8. சதவிகிதம், எஸ்.எல். 100 -125 மில்லி அல்லது டைமித்தோயெட் 30 இ.சி, 650 மில்லி ஆகிய மருந்துகளில் ஒன்றை தெளிக்கலாம். மூலிகை பூச்சி விரட்டி, மீன் அமினோ அமிலம் போன்றவற்றையும் பயன்படுத்தி பூச்சிகளையும் விரட்டி, அவை வராமலும் தடுக்கலாம்.

தொடர்புக்கு 98416 55629.

- எம்.ஞானசேகர்

விவசாய ஆலோசகர் சென்னை.







      Dinamalar
      Follow us