sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

தென்னையை தாக்கும் பூஞ்சாள நோயை தடுக்கும் முறைகள்

/

தென்னையை தாக்கும் பூஞ்சாள நோயை தடுக்கும் முறைகள்

தென்னையை தாக்கும் பூஞ்சாள நோயை தடுக்கும் முறைகள்

தென்னையை தாக்கும் பூஞ்சாள நோயை தடுக்கும் முறைகள்


PUBLISHED ON : நவ 20, 2019

Google News

PUBLISHED ON : நவ 20, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் தென்னை விவசாயிகள் குரும்பைகள், இளங்காய் உதிர்தல், நுண்கிருமிகள், பூச்சிகள், எலி, அணில்களின் தாக்குதல் பிரச்னைகளை எதிர் கொள்கிறார்கள். மண் சத்து குறைபாடு, அதிக களர், உவர் தன்மை, வடிகால் வசதியின்மை, வறட்சி, மகரந்த சேர்க்கை குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, மரங்களின் பாரம்பரிய குணம் ஆகியவற்றால் தென்னையில் குரும்பை, இளங்காய்கள் உதிரும்.

தென்னையில் பூஞ்சாள வித்துக்கள்

தென்னையில் பாளைகள், வெளிவந்ததில் இருந்து 11-12 மாதங்களில் தேங்காய் அறுவடைக்கு தயாராகும். இதற்கு இடையில் குரும்பை பருவத்தில் இருந்து காய்களின் வெவ்வேறு வளர்ச்சி பருவத்திலும் நுண் கிருமிகள், பூச்சிகள், எலி, அணில்களினால் குரும்பை, இளங்காய்கள் உதிரும். கோலிடோடிரைசம், போட்ரியோ டிப்லோடியா, போட்ரியோஸ் பேரியா ரோடினா ஆகிய பூஞ்சாளங்கள் சேர்ந்தோ, தனியாகவோ குரும்பைகள், இளங்காய்களை தாக்குவதால் குலையில் இருந்து முன்பே உதிர்கிறது.

இந்த பூச்சாளங்கள் குரும்பை, தேங்காய்களில் தேங்காய் வெட்டும் போது ஏற்படும் காயம், செதில், மாவுப் பூச்சிகளால் ஏற்படும் காயங்களால் தேங்காயின் உரிமட்டை பகுதியில் நுழையும்.

உரி மட்டை பகுதியில் பழுப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும். இந்த திட்டுக்கள் குரும்பை தேங்காய் காம்பு பகுதியில் இணையும் இடத்திற்கு பரவும் போது முற்றிலும் அழுகி, கருப்பாக மாறி குரும்பை, முற்றாத தேங்காய்கள் உதிரும்.

கீழே உதிர்ந்த பின் பூஞ்சாளங்கள் தேங்காய், குரும்பைகளின் மேற்பரப்பு முழுவதும் பரவி உரிமட்டை முழுவதும் அழுகி காய்ந்து விடும். காய்ந்த உரி மட்டைகளின் மேல் கருப்பு திட்டுக்கள் காணப்படும். இதில் ஆயிரக்கணக்கான பூஞ்சாள வித்துக்கள் இருக்கும். இது காற்றில் பரவி மரத்தில் உள்ள நல்ல குரும்பை, இளங்காய்களை தாக்கும்.

தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை

தேங்காய் குலையில் அரிவாள் காயம் ஏற்படுத்தக் கூடாது. செதில், மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தினால் பூஞ்சாள தாக்குதல் குறையும். நோயினால் உதிரும் குரும்பை, இளங்காய்களை எரிக்க வேண்டும். பாளை விரிந்த இரு மாதங்களுக்கு பின் ஒரு கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் விதம் கார்பண்டசிம், டீபால் மருந்து கலந்து தெளிக்க வேண்டும்.

மானோகுரோட்டோபாஸ் அல்லது டைமித்தோயேட் அல்லது மிதைல் பாரத்தியான் மருந்து 1 மி.லி., மருந்துடன் 0.5 மி.லி., டீபால், 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மரத்தின் தண்டு பாகத்தில் பாலித்தீன் தாள், டின்தகடு, டின் புனல் பொருத்தவும். புரோமடயலோன் 0.005 தயார் நிலையில் கேக் மரத்திற்கு 4 சிறு துண்டுகள் வீதம், 4 இளநீர் காய்களின் குலைக் காம்பின் அடியில் வைத்து கட்டுப்படுத்தலாம்.

- பா.இளங்கோவன்

வேளாண் துணை இயக்குனர்

தேனி.

98420 07125







      Dinamalar
      Follow us