
மாதுளை - காய்ந்த, நோய் தாக்கிய, குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்துள்ள கிளைகள், போத்துக்களை நீக்கிவிட வேண்டும். புதிய கிளைகளில் பழங்கள் தோன்றும். எனவே, புதிய கிளைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த பழங்களை அறுவடை செய்தபிறகு டிசம்பர் மாதத்தில் பழைய கிளைகளை மூன்றில் ஒரு பகுதி நீக்கிவிட வேண்டும். பூக்கள் அதிகமாக இருந்தால் போதிய எண்ணிக்கை விட்டு, மீதமுள்ளவற்றை நீக்கிவிட்டால் பெரிய பழங்களைப் பெறலாம். திரவ பாரபின் ஒரு சதம் மருந்தை ஜூன் மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் பழங்களில் வெடிப்பு உண்டாவதைத் தடுக்கலாம். (தகவல்: வே.கெர்சோன் தங்கராஜ், தோட்டக்கலை உதவி இயக்குனர், போடி)
ஏலத்தோட்டத்தில் பூச்சி, நோய் நிர்வாகம்: தோட்டத்தில் பறக்கும் வேர்ப்புழு வண்டுகளை சேகரித்து அழித்துவிட வேண்டும். * ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் குயினால்பாஸ் அல்லது பாசலான் பூச்சிக்கொல்லியை 100 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். (தண்டு துளைப்பான் அந்துப்பூச்சி வெளிவரும் சம யத்தில் தெளிக்க வேண்டும்). * அழுகல் மற்றும் கிழங்கு அழுகல் நோய் தாக்குதல் அதிகமுள்ள இடங்கள் பயிர் சுகாதார முறைகளைக் கடைபிடிப்பது, பூசனக்கொல்லி மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளைப் பயன்படுத்துவது போன்ற ஒருங்கிணைந்த நோய் நிர்வாக முறைகளைக் கையா ளலாம். * தண்ணீர் தேங்கும் பகுதிகளில் போதுமான வடிகால் வசதி அமைக்க வேண்டும். * 0.2 சதம் காப்பர் ஆக்ஸி குளோரைடு கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் என்ற அளவில் கலந்து தூர்ப்பகுதியில் ஊற்றுவதுடன் ஒரு சத போர்டோ கலவை தெளிக்க வேண்டும். 10 நாட்கள் கழித்து டிரைகோடெர்மாவைத் தனியாகவோ அல்லது சூடாமோனசுடன் கலந்தோ தூர்ப்பகுதியில் இடவேண் டும். மீண்டும் ஒருமுறை டிரைகோடெர்மாவைத் தனியாகவோ அல்லது சூடாமோனசுடன் கலந்தோ இட்டு 0.4 சதம் அகோமின் கரைசலை இலையின் மீது தெளிக்க வேண்டும். * உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளைக் கடைபிடிக்கும்போது டிரைக்கோடெர்மா ஹேசியானத்தை தனியாகவோ அல்லது சூடோமோனஸ் புளோரசன்சுடன் கலந்தோ தூர்ப்பகுதியில் இடவேண்டும். * தோட்டத்தை அடிக்கடி கண்காணித்து கட்டே (நச்சுயிரி) நோய் தாக்குதல் உள்ள செடிகள் காணப்பட்டால் அவற்றை உடனுக்குடன் அகற்றி அழித்து விட வேண்டும்.
நாற்றுப்பண்ணை: இந்தியாவில் முதல் முறையாக நாற்றுப்பண்ணைக்கு என்று மிகப்பெரிய அலுவலகம் வாசனை சந்தனம், அகர்மரம், குமிழ், தேக்கு, மலைவேம்பு, கலப்பு மரங்கள் வளர்ப்பு. சொந்த பண்ணையில் நாற்று உற்பத்தி, விவசாயிகளின் தேவைக்கேற்ப கன்றுகளை வழங்குதல், நடவு மற்றும் பயிரிடப்படும் புதிய தொழில்நுட்ப முறையினை பயன்படுத்துதல்; கன்று நடவு செய்த விவசாயிகளின் தகவல்களை முழுமையாக பராமரிக்க கணினி வசதி; விவசாயிகளின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மாநிலந்தோறும் நிறுவனத்தில் கருத்தரங்கு, பயிற்சிகளை அனுபவம் வாய்ந்த வேளாண் வல்லுனர்களைக் கொண்டு நடத்துதல்;
மாநிலங்களில் பல்வேறு இடங்களில் பல் வேறு நிலைகளில் உள்ள மரங்களின் மாதிரிப்பண்ணை; அறுவடை செய்த மரங்களை பயன்பாடுகளுக்கு ஏற்ப உபபொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தல்; உபபொருட்களை உற்பத்தி செய்ய முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தல்; ஆர்டரின்பேரில் - குழி எடுத்து நடவு, சொட்டுநீர் பாசனம், மின்வேலி அமைத்துக்கொடுக்கப்படுகிறது. தொடர்பு முகவரி: 'ராஜா, பாளையம் கார்கூடல்பட்டி (போஸ்ட்), ராசிபுரம்-636 202. நாமக்கல் மாவட்டம். போன்: 04287-294 094, 96555 99111; 97875 37631, 97517 92555, 94886 94459.
ட்ரீ ரிச் பயோபூஸ்டர்: வளர்ச்சி ஊக்கியை ஆராய்ச்சியின் மூலம் கோவையிலுள்ள வன மரபியல் மற்றும் வனப்பெருக்க மையம் உருவாக்கியுள்ளது. இந்த வளர்ச்சி ஊக்கியை மர இலைகளான சவுக்கு, குமிழ், பெருமரம், மலைவேம்பு, தேக்கு மற்றும் யூகலிப்டஸ் போன்ற மரவகை நாற்றுக்களை வளர்க்க பெரிதும் பயன்படுகிறது. கத்தரி, தக்காளி, மிளகாய் போன்ற காய்கறிப் பயிர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. தொடர்புக்கு: 'வன மரபியல் மற்றும் வனப்பெருக்க மையம், ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர்-641 002. போன்: 0422-248 4169, 248 4100.
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

