sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நவீன தொழில்நுட்பம்

/

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்


PUBLISHED ON : ஜூன் 08, 2011

Google News

PUBLISHED ON : ஜூன் 08, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திப்பிலி: பொதுவாக மலைப்பிரதேசங்களில் பயிரிடப்படும் திப்பிலி பேச்சிப்பாறையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் முயற்சியால் சமவெளிப்பகுதியிலும் சக்கைப்போடு போடுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். இதற்கு நிழல் தேவை என்பதால் தனிப்பயிராக நடவு செய்ய முடியாது. வாழையைவிட தென்னைக்கு இடையில்தான் நன்றாக வளரும். 25 அடி இடைவெளியில் நல்ல நீர்வசதியுள்ள தென்னந் தோப்புகளில் திப்பிலியை நடவு செய்யலாம். இளவயது தென்னைகள் உள்ள தோட்டங்களிலும் நடலாம். இயற்கையில் கிடைக்கும் தொழு உரமே போதுமானது. ஒரு எக்டருக்கு 600 கிலோ வரை மகசூல் கிடைக்கும். அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். அதற்கு பிறகு திப்பிலியின் வேரையும் விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரிலிருந்து 2 டன் வேர் கிடைக்கும். கிலோ ரூ.20 என்று விலை வைத்து சித்த மருத்துவ நிறுவனங்கள் வாங்கிக் கொள்கின்றன. மேலும் விபரங்களுக்கு தங்கசெல்வபாய், இணை பேராசிரியர், வேளாண் அறிவியல் மையம், பேச்சிப்பாறை, 04651-281 759.

திப்பிலி சாகுபடியில் வெற்றி கண்ட விவசாயி சகாயதாஸ், 97516 68745. இவர் கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உளள கொருப்பைக்குழியில் இரண்டரை ஏக்கர் தென்னையில் ஊடுபயிராக வாழை மற்றும் திப்பிலியை சாகுபடி செய்து வருகிறார்.

(தகவல்: பசுமை விகடன், 25.5.11)

அக்ரி கிளினிக் மற்றும் வேளாண் தொழில்மையம் துவங்க இலவச பயிற்சி அளிக்கும் நிறுவனம் தேசிய வேளாண் நிறுவனம்,சென்னை (மேனேஜ் - நிறுவனம் மற்றும் மத்திய வேளாண் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனம்).

இரண்டுமாத உறைவிட பயிற்சி, உணவு மற்றும் தங்கும் வசதி இலவசம்.

தேசிய வேளாண் நிறுவனம், ஊரக மேம்பாட்டு மையம், இல்லீடு கிராமம், காஞ்சிபுரம்.

விவசாயம் மற்றும் பண்ணைத் தொழில்முனைவோரை உருவாக்குதல். அங்கீகரிக்கப்பட்ட கல்வித்தகுதி - ஐசிஏஆர்/யுஜிசி இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வேளாண் பட்ட, பட்டயப்படிப்பு (அ) உயிரியல் சார்ந்த முதுநிலை படிப்பு முதலியன.

பயிற்சிக்குப்பின் கடனாக தனி நபருக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரையிலும் 5 நபர் கொண்ட குழுவிற்கு ரூ.100 லட்சம் வரையிலும் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்கலாம். பிசி/எம்பிசி பிரிவினருக்கு கடன் தொகையில் 30 சதம்; எஸ்சி/எஸ்டி மற்றும் மகளிருக்கு 44 சதம் மானியம் அளிக்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் ரூ.500க்கான காசோலையை மேனேஜ், ஐதராபாத் என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு உரிய கல்விச் சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்கவும். 'மைய அதிகாரி, தேசிய வேளாண் நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், அண்ணா பல்கலைக்கழக தரமணி வளாகம், தரமணி,

சென்னை-600 113. 044-2254 2598; 94452 01083.

-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.






      Dinamalar
      Follow us