sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பயறுவகைப் பயிர்களுக்கு மானாவாரி ஊட்டமேற்றிய தொழு உரம்

/

பயறுவகைப் பயிர்களுக்கு மானாவாரி ஊட்டமேற்றிய தொழு உரம்

பயறுவகைப் பயிர்களுக்கு மானாவாரி ஊட்டமேற்றிய தொழு உரம்

பயறுவகைப் பயிர்களுக்கு மானாவாரி ஊட்டமேற்றிய தொழு உரம்


PUBLISHED ON : ஜூன் 08, 2011

Google News

PUBLISHED ON : ஜூன் 08, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.

15 நாட்கள் கழித்து கிளறிவிட்டு மீண்டும் மூட்டம் போடவேண்டும். இதன் மூலம் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்துக்கள் பயிருக்கு கிட்டும் நிலைக்கு வரும். ஒரு மாதம் முடிந்து மானாவாரி நிலக்கடலை விதைக்கும்போது இந்த உரக்கலவையுடன் 9 கிலோ யூரியா மற்றும் 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை கலந்து விதைப்பு சாலில் இடவேண்டும்.

ஊட்டமேற்றிய தொழு உரம் இடுவதால் நிலக்கடலை மகசூல் அதிகரிப்பதுடன் மண்ணின் வளமும், ஈரத்தன்மையும் பாதுகாக்கப்படும். வறட்சியை தாங்கி வளரும் தன்மை பயிருக்கு கிடைக்கும். நிலக்கடலை பயிரின் வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.

விழுதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கூடுதல் மகசூல் பெறமுடியும். வைகாசி பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு மழை பெறப்பட்டவுடன் துவங்கும். எனவே, தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். ஒரு மாதம் மூட்டம் போட்டு வைத்திருந்தால் மட்டுமே முழு பயன்பெற முடியும்.

கோடை மழையை பயன்படுத்தி மானாவாரியில் பயறுவகைப் பயிர்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு ஆகிய பயிர்களை விதைக்க தயாராகவுள்ள விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழு உரத்தினை அடி உரமாக இடவேண்டும்.

கடைசி உழவில் ஏக்கருக்கு ஐந்து டன் தொழு உரம் இட்டு மானாவாரியில் பயிர்சாகுபடி செய்யும் வழக்கம் மறைந்து வெகு காலம் ஆகிவிட்டது. ஏனெனில் தொழு உரம் அதிகமாக தயாரிப்பது என்பது எட்டாக் கனியாகிவிட்டது. இருப்பினும் மானாவாரியில் சாகுபடி செய்யும் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரவும், அதிக மகசூல் கொடுக்க தேவையான சத்துக்களை அடியுரமிடுவதும் அவசியமான ஒன்றாகும்.

எனவே தற்பொழுது கிடைக்கக்கூடிய குறைந்த தொழு உரத்துடன் பயிர்களுக்கு தேவைப்படும் சத்துக்களை தரும் ரசாயன?உரங்களை கலந்து ஊட்டமேற்றிய தொழு உரமாக தயாரித்து இடவேண்டும்.

ஒரு ஏக்கர் பயறுவகைப் பயிர்களுக்கு அடியுரமிட குறைந்தபட்சம் ஒரு வண்டி மக்கிய தொழு உரத்துடன் 62.5 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை நன்கு கலந்து மேடான இடத்தில் குவித்து வைத்து, காற்று புகாவண்ணம் சேறு பூசி மூட்டம்போட்டு வைக்க வேண்டும்.

மக்கிய தொழு உரத்துடன் கலந்துள்ள சூப்பர் பாஸ்பேட் உரமானது வேகவைத்த உணவு போல் நன்கு மக்கிய ஊட்டமேற்றிய தொழு உரமாக மாறுகிறது. இந்த ஊட்டமேற்றிய தொழு உரத்துடன் ஏக்கருக்கு 12 கிலோ யூரியா கலந்து பயறுவகை விதைக்கும் முன் விதைப்பு சாலில் சீராக இடவேண்டும். இவ்வாறு அடியுரமாக இடுவதால் மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சுடாமல் காப்பதுடன், அதிக வேர்கள் வளர்ந்து மண்ணில் உள்ள ஈரத்தை பயிர்களுக்கு எடுத்துக் கொடுப்பதால் வறட்சியைத் தாங்கி பயிர் நன்கு வளர்வதுடன் அதிக மகசூல் கிடைக்கும்.

மேலும் மானாவாரியில் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்யும்போது விதை விதைக்கும் கருவியை பயன்படுத்தி விதைப்பு செய்வதுடன் பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க வேண்டும். ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்களுடன் விதைநேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 50 கிலோ ஜிப்சம் அடியுரமிட வேண்டும். விதைத்த 30 மற்றும் 45வது நாட்களில் மழை பெய்து போதிய ஈரம் இருக்கும்போது 2 சதவீதம் டிஏபி உரக்கரைசல் தெளிக்க வேண்டும்.

எம்.அகமது கபீர்,
தாராபுரம்-638 656.
மொபைல்: 93607 48542.






      Dinamalar
      Follow us