sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

தரிசு நிலத்தில் சப்போட்டா சாகுபடி

/

தரிசு நிலத்தில் சப்போட்டா சாகுபடி

தரிசு நிலத்தில் சப்போட்டா சாகுபடி

தரிசு நிலத்தில் சப்போட்டா சாகுபடி


PUBLISHED ON : ஏப் 06, 2011

Google News

PUBLISHED ON : ஏப் 06, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்: சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது. ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது.

பருவம்: ஜூலை - ஆகஸ்ட். ரகங்கள்: கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ-1, கோ-2, பெரியகுளம் 1, 2, 3.

பயிர் பெருக்கம்: ஒட்டுக்கட்டிய செடிகள்

பின்செய் நேர்த்தி: ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். தரை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்க வேண்டும். சப்போட்டா மரத்திற்கு கவாத்து செய்தல் தேவை இல்லை. உயரமாக வளரக்கூடிய ஒரு சில தண்டுகளை மட்டும் நீக்கிவிட வேண்டும். அடர்த்தியான, நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிடவும்.

ஊடுபயிர்: ஆரம்ப வருடங்களில் மர வரிசைகளுக்கு நடுவே காய்கறிப் பயிர்களையும், குறுகிய காலப் பழப்பயிர்களான பப்பாளி போன்றவற்றையும் சாகுபடி செய்வதன் மூலம் வருமானத்தைப் பெருக்கலாம்.

அறுவடை மற்றும் மகசூல்: சப்போட்டா பயிர் வருடத்திற்கு இரண்டு முறை பெரும்பான்மையாக காய்க்கும். ஏப்ரல் முதல் ஜூலை வரை ஒரு முறையும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஓரளவு காய்க்கும். இந்தப் பயிரின் பழ முதிர்ச்சியை அறிவது சிறிது கடினம். இதர பயிர்களைப் போல் இதில் நிறமாற்றம் ஏற்படுவதில்லை. ஆயினும் பழத்தின் தோலில் உள்ள சிறிய சிறிய கருநிறத்துகள்கள் மறைந்து, பழங்கள் சிறிது பளபளவென்றிருக்கும். பழத்தை நகத்தால் கீறிப்பார்த்தால், உள்ளே மித மஞ்சள் நிறம் தெரிய வேண்டும். பால் வடியக் கூடாது. பழத்தின் அடிப்பாகத்தில் உள்ள முள் போன்ற சிறிய நுனி, எளிதில் பிரிந்துவரும். பழத்தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவாகும். ஒரு எக்டருக்கு 20 முதல் 25 டன்கள் மகசூலாகக் கிடைக்கும். தொடர்புக்கு: எம்.அகமதுகபீர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லிஸ் நகர் போஸ்ட், தாராபுரம்-638 657.

எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர்,

அக்ரி கிளினிக், தாராபுரம். 93607 48542.






      Dinamalar
      Follow us