/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நாட்டுக் கோழி வளர்ப்பில் நிலையான வருவாய் உண்டு
/
நாட்டுக் கோழி வளர்ப்பில் நிலையான வருவாய் உண்டு
PUBLISHED ON : நவ 27, 2019

நாட்டுக்கோழி வளர்ப்பு வருமானம் குறித்து, அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ், 28, கூறியதாவது:வீட்டில், ஓரிரு கோழிகளே இருந்தன. இந்நிலையில், நாட்டு சேவல்கள், 450 ரூபாய், பெட்டை கோழிகள், 400 ரூபாய்க்கு விலை போனதை அறிந்தேன். இதனால், கூலி தொழிலுக்கு சென்று வந்தபடியே, நாட்டுக் கோழி வளர்ப்பில் தீவிரம் காட்டினேன்.என் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள குறைந்த இடத்தில், சுற்றிலும் வலை அடித்து, 50 நாட்டு கோழி குஞ்சுகளை வாங்கி, தொழிலை துவங்கினேன். தற்போது, 200 கோழிகள் உள்ளன. ஒரு முட்டை, 10 ரூபாய் வீதம், வாரத்திற்கு, 700 ரூபாய் வரையிலும், மாத இறுதியில், 10 கோழிகள் விற்றால், 4,000 ரூபாயும் கிடைக்கிறது. மாதம், 6,000 ரூபாய் கிடைப்பது, குடும்ப செலவிற்கு உதவியாக இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 88707 48723

