தினமலர் முதல் பக்கம் »திண்டுக்கல்  மாவட்டத்தை மீட்போம்

கல்விப் பணியில் தொய்வு

திண்டுக்கல் பள்ளி கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியருக்கு கேட்ட தகவலையே மீண்டும் கேட்டு தினமும் 10 மெயில்கள் வருவதால், அவர்களின் கல்விப் பணியில் தொய்வு ஏற்படுகிறது.ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்களின் கண்காணிப்பில் பணிப்பதிவேடு, சம்பளப்பதிவேடு உள்ளிட்ட 53 பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அனுப்பப்பட்டு வரும் மெயில்கள் தலைமை ஆசிரியர்களை 'கிறுகிறுக்க' வைக்கிறது. தினமும் குறைந்த பட்சம் 5 முதல் அதிக பட்சம் 10 மெயில்கள் வரை வருகின்றன.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது: பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எப்போதாவது ஒரு மெயில் வரும். பதில் அளிக்கவும் அவகாசம் வழங்கப்படும். இதனால், தலைமை ஆசிரியர்கள் காலையில் வழிபாட்டு நேரம் முடிந்ததும் பள்ளி வளாகத்தை சுற்றி வருவார். எந்த வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கிறார், ஆசிரியர் இல்லாமல் உள்ளார் என்ற விபரம் அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பார். பொது தேர்வு மாணவர்களின் விபரங்களை கையில் வைத்து கொண்டு, அவர்களின் கற்பித்தல் மேம்பாட்டு பணியில் ஈடுபடுவர்.தற்போது பள்ளி கல்வித்துறை மெயில் என்ற பெயரில் பணிப்பளுவை அதிகரித்துவிட்டனர். கேட்ட தகவல்களையே மீண்டும், மீண்டும் கேட்கின்றனர். 'எமிஸ்' எனப்படும் கல்வி தகவல் தொகுப்பு மேலாண்மையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விபரம் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பணி 99 சதவீதம் முடிந்துள்ளது. ஆனாலும், மாணவர்களின் எண்ணிக்கை, இனச் சுழற்சி, மாற்றுத்திறன் மாணவர்கள், ஆசிரியர், ஆசிரியரல்லாத விபரம், பதவி உயர்வு, முன்னுரிமை பட்டியல் போன்ற விபரங்களை மீண்டும், மீண்டும் கேட்கின்றனர்.இதை சென்னையிலிருந்தே நேரடியாக பிரின்ட் எடுத்து கொள்ளலாம். ஆனால், அவர்கள் பள்ளிகள் மூலம் பிரின்ட் எடுத்து வர ஒருவரை நியமித்து நேரடியாக வழங்க கேட்கின்றனர். மாலை 4:30 மணிக்கு மெயில் அனுப்பி விட்டு மறுநாள் காலையில் அறிக்கை கேட்கின்றனர். தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணிச்சுமையால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது, என்றார்.




தலைப்புகள் :


» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X