தினமலர் முதல் பக்கம் »திருப்பூர்  மாவட்டத்தை மீட்போம்

தடை மீறி உண்ணாவிரதம்; அவிநாசியில் பரபரப்பு

அவிநாசி:அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, வேளாண்மை துறை பயன்பாட்டில் இருந்த நிலத்தில், வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது 'இந்த இடத்தை அங்குள்ள தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். நிலத்தை மீட்டெடுக்க வேண்டும்' எனக்கூறி, தாலுகா அலுவலகம் முன், அனுமன் சேனா மாநில செயலாளர் தியாகராஜன், பாரதிய கிசான் சங்க நிர்வாகி வேலுசாமி, பால்ராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட ஏழு பேர் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்தனர்.அவர்கள் கூறுகையில், "16 சென்ட் நிலம் வேளாண்மை துறையி னர் பயன்பாட்டில் தான் இருந்தது. தற்போது சட்ட விரோதமாக ஆவணங்களை மாற்றி, தனியாருக்கு சாதகமான நிலை பாட்டை வருவாய்த்துறையினர் எடுத்துள்ளனர்.ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனியார் மில் உரிமையாளர் கட்டுமானப்பணி செய்து வருகிறார். அதை தடுத்து நிறுத்த வேண்டும் என, பல முறை புகார் தெரிவித்தும் பலனில்லை," என்றனர்.இன்ஸ்பெக்டர் முரளி, அவர்களிடம் கூறுகையில், "நில விவகாரம் தொடர் பாக கலெக்டர் தலைமையில், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடத்தி முடிவெடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலமோ, சட்டப்படியோ எதிர்கொள்ளுங்கள்' எனக்கூறினார்.இதை ஏற்க மறுத்த விவசாய சங்க பிரதிநிதிகள், தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார், திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.





தலைப்புகள் :
» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X