Download for free from the App Store »
Dinamalar, a leading Tamil Newspaper & Dinamalar.com, No.1, Indian publication portal from India, bring out this iPhone and iPod Touch Apps to provide its enriched content with better user experience. It will be updated 24x7 with a dedicated team.
Dinamalar iPhone and iPod Touch Apps gives you latest news from Tamil Nadu, India, World & important districts news, Cinema news, reviews, sports news & live cricket score, business news & NSE/BSE market update, Rasi palan and photo gallery & video – News, Trailer… with some unique iPhone and iPod Touch Apps user experience.
ஐ-போன் - சந்தேகங்களுக்கு விடை
-
1. ஐ-போன் அப்ளிகேஷன் என்பது என்ன?
உங்கள் ஐ-போனில் தினமலர் இதழை பார்வையிடுவதற்கு வசதி செய்யும் அப்ளிகேஷன்தான் இது. தினமலர் அப்ளிகேஷனை ஐபோன் ஆப் ஸ்டோரிலிருந்து நீங்கள் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு விருப்பமான தினமலர் இதழை ஐ-போனின் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் பார்க்கலாம்... படிக்கலாம்.
-
2. புதிய அப்ளிகேஷனில் என்ன கிடைக்கும்?
உடனுக்குடன் செய்திகள் மற்றும் தகவல்கள் தினமலர் அப்ளிகேஷனில் பெற்றுக் கொள்ளலாம். தினமலர் இதழின் பிரத்யேக பகுதிகளான டீ கடை பெஞ்ச் உள்ளிட்ட பகுதிகளையும் பார்க்கலாம். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். சினிமா, விளையாட்டு, தமிழகச் செய்திகள், மாவட்டச் செய்திகளையும் படிக்கலாம்.
-
3. தினமலர் படிப்பதற்கு தனி கட்டணம் உண்டா?
இலவசமாகவே தினமலர் இதழை ஆப்பிள் அப்ளிகேஷன் வழியாக நீங்கள் படிக்கலாம். வை-பி நெட்வொர்க் இருந்தால் நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். அவ்வாறு இல்லாத இடங்களில் உங்களுடைய மொபைல் நெட்வொர்க் ஜி.பி.ஆர்.எஸ்., கட்டணத்தைத் தவிர வேறு எந்த கட்டணமும் இதற்கு இல்லை.
-
4. எந்த மாடல் ஐ-போனில் தினமலர் இதழ் தெரியும்
பழைய ஐ-போனில் தமிழ் எழுத்துருக்கள் இல்லாததால் தினமலர் இதழைப் படிக்க முடியாது. ஆனால் iOS 3.2 அல்லது அதற்கு மேல் உள்ள version ல் தினமலர் இதழை எளிதாகப் பார்க்கலாம்.
-
5. தினமலர் அப்ளிகேஷனை டவுண்லோட் பதிவிறக்கம் செய்வது எப்படி
www.itunes.com/appstore/ எனும் முகவரிக்குச் சென்று தினமலர் அப்ளிகேஷனை டவுண்லோட் செய்யலாம். அவ்வப்போது அப்கிரேட் செய்யப்பட்ட அப்ளிகேஷனையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-
6. மொபைல் தினமலருக்கும் ஐ-போன் தினமலருக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
மொபைல் போனில் தினமலர் படிக்க உங்களுக்குத் தொடர்ச்சியான இன்டர்நெட் கனெக்ஷன் தேவை. ஆனால், ஐ-போன் அப்ளிகேஷன் வழியாக தினமலர் அப்டேட் செய்யப்படுவதால், உங்களால், டவுண்லோட் செய்த செய்திகளை ஆப்லைனிலும் நீங்கள் படித்துகக்கொள்ளலாம். மேலும் உங்கள் ஐ-போனில் உள்ள பிரத்யேக வசதிகளுக்கு ஏற்ப ஐ-போன் தினமலர் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
7. மொபைல் டவர் இல்லாத இடங்களிலும் செய்திகளைப் படிக்க முடியுமா?
பயணம் செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் டவுண்லோட் சின்க் செய்திருந்தால், உங்களுக்கு கடைசியாக டவர் இருந்த இடம் வரை அப்டேட் செய்யப்பட்ட செய்திகளை நீங்கள் படிக்கலாம். அடுத்த முறை டவர் கிடைக்கும் போதுதான், அதற்குப் பிந்தைய புதிய செய்திகள் அப்டேட் செய்யப்படும்.
Send your comments & suggestions to apple@dinamalar.in
To Advertise : Click Here |