தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 10 வங்கதேச பெண்கள் மீட்பு

 விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 10 வங்கதேச பெண்கள் மீட்பு

 விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 10 வங்கதேச பெண்கள் மீட்பு


ADDED : ஜூலை 01, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்: களூரு: பெங்களூரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வங்கதேச நாட்டின், 10 பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களை அழைத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரின் பானஸ்வாடி, ஹென்னுார் பகுதிகளில், வங்க தேச நாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக, சி. சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் தர்மேந்திராவுக்கு தகவல் கி டைத்தது.

தகவலின்படி நேற்று முன்தினம் நள்ளிரவில், பானஸ்வாடி, ஹென்னுார் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் மூன்று வீடுகளில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட, 10 பெண்கள் மீ ட்கப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணை, ஆவணங்களை சரி பார்த்த போது வங்க தேசத்தினர் என்பது தெரிய வந்தது. அனைவரையும் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரிகளிடம், போலீசார் ஒப்படைத்தனர். அவர்களை நாடு கடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்திய வங்க தேசத்தின் சுஹாக் மன்சூர் அலி, 29, முகுல், 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், பத்து பெண்களையும் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமா க அழைத்து வந்ததுடன், அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிந்தது.

அதற்கு முன்பும் பெண்களை அழைத்து வந்து, விபசாரத்தில் தள்ளி உள்ளனரா என்றும் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us