/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவக்கம்; சித்து அரசை திணறடிக்க தயாராகும் எதிர்க்கட்சிகள்
/
சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவக்கம்; சித்து அரசை திணறடிக்க தயாராகும் எதிர்க்கட்சிகள்
சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவக்கம்; சித்து அரசை திணறடிக்க தயாராகும் எதிர்க்கட்சிகள்
சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவக்கம்; சித்து அரசை திணறடிக்க தயாராகும் எதிர்க்கட்சிகள்
ADDED : டிச 07, 2025 07:11 AM
பெங்களூரு: பெலகாவி சுவர்ண விதான்சவுதாவில், நாளை முதல் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. பல துறைகளில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு, முதல்வர் பதவி விஷயத்தில் சித்தராமையா, சிவகுமார் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உட்பட பல விஷயங்களை அஸ்திரமாக பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுக்க, எதிர்க்கட்சிகள் தயாராகின்றன.
பெலகாவியின் சுவர்ண விதான்சவுதாவில், நாளை முதல் பத்து நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவுள்ளது.
இதற்காகவே எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., ஆவலுடன் காத்திருக்கின்றன. அரசை திணறடிக்க பல அஸ்திரங்கள் கிடைத்துள்ளன. அரசின் பல துறைகள் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், கமிஷன் குற்றச்சாட்டு, முதல்வர் பதவிக்காக சித்தாரமையா, சிவகுமார் இடையே எழுந்துள்ள பனிப்போர், அமைச்சர்களின் கருத்து என பல அம்சங்களை முன் வைத்து, அரசை நெருக்கடியில் சிக்க வைக்க எதிர்க்கட்சிகள் திட்டம் வகுத்துள்ளன.
வாக்குறுதி திட்டங்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வளர்ச்சி பணிகளை அலட்சியப்படுத்தியது போன்ற விஷயங்களை பயன்படுத்த, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இரண்டரை ஆண்டு வெற்றிகரமாக ஆட்சியை நிறைவு செய்துள்ள காங்கிரஸ் அரசுக்கு, நாளை துவங்கும் குளிர்கால கூட்டத்தொடர், அக்னிபரிட்சையாக இருக்கும்.
எதிர்க்கட்சிகளின் அஸ்திரங்களை எதிர்க்கொள்ள அரசும் தயார் நிலையில் உள்ளது.
இது குறித்து, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் ஏற்கனவே அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, எதிர்க்கட்சிகளின் அஸ்திரங்களுக்கு பதிலடி கொடுக்க, என்னென்ன விஷயங்களை கையில் எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை பதவி காலத் தில் நடந்த ஊழல்களை கிளறுங்கள். ஊழல் நடந் திருப்பது அரசு அமைத்த விசாரணை ஆணையத்தின் விசாரணையில் தெரிந்தது. ஆவணங்களுடன் பதிலடி தாருங்கள். ஒற்றுமையாக இருந்து, எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ளுங்கள்.
அரசுக்கு பக்கபலமாக நில்லுங்கள். முக்கிய மான விஷயங்களை விவாதி யுங்கள். பா.ஜ.,விலும் உட்கட்சி பூசல் உள்ளது. இதை சுட்டி காட்டுங்கள் என, அறிவுறுத்தினர்.
வழக்கம் போன்று இம்முறையும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் காரசார வாக்குவாதம், வெளி நடப்பு , கோப்புகளை கிழித்தெறிவது, ஒருவரை ஒருவர் திட்டி கொள்வது, கூச்சல் போடுவது என, பெலகாவி கூட்டத்தொடர்களை கட்டும் என்பதில் சந்தேகமே இல்லை .
வட மாவட்டங்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக, பெலகாவியில் சுவர்ண விதான்சவுதா கட்டப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் வட மாவட்டங்களை தவிர, மற்ற விஷயங்களை விவாதித்து கூட்டத்தொடரை வீணாக்குகின்றனர்.
இம்முறையும் அப்படி நடக்காமல், அர்த்தமுள்ளதாக நடத்துங்கள் என, வட மாவட்ட மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

