/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை எதிர்க்கட்சியாக இருப்போம் என்கிறார் பா.ஜ., தலைவர்
/
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை எதிர்க்கட்சியாக இருப்போம் என்கிறார் பா.ஜ., தலைவர்
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை எதிர்க்கட்சியாக இருப்போம் என்கிறார் பா.ஜ., தலைவர்
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் எண்ணம் இல்லை எதிர்க்கட்சியாக இருப்போம் என்கிறார் பா.ஜ., தலைவர்
ADDED : டிச 02, 2025 04:31 AM

உத்தர கன்னடா: ''மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இவ்வேளையில் அரசு அமைக்கும் எண்ணம் பா.ஜ.,வுக்கு இல்லை,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இவ்வேளையில் அரசு அமைக்கும் எண்ணம் பா.ஜ.,வுக்கு இல்லை. மாநில மக்கள், காங்கிரசுக்கு தெளிவான பெரும்பான்மை வழங்கி உள்ளனர்.
அவர்கள் பா.ஜ.,வை எதிர்க்கட்சியில் வைத்து உள்ளனர். எதிர்க்கட்சியாக, அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம்; தொடர்ந்து செய்வோம்.
முதல்வர் பதவிக்கான போட்டி, ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
எனக்கு தெரிந்த தகவலின்படி, ஆளும் கட்சியில் மூத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட ஏழு அல்லது எட்டு பேர் முதல்வராக முயற்சிக்கின்றனர். இதன் விளைவால், அரசு நிர்வாக இயந்திரம் செயலிழந்துவிட்டது.
ஆட்சிக்கு வந்த பின், விவசாயிகள் மீது சித்தராமையா அலட்சியமாக நடந்து கொள்கிறார். விவசாயிகளின் துயரங்களுக்கு காங்கிரஸ் அரசு செவிசாய்க்கவில்லை.
குளிர்கால கூட்டத்தொடரில், வட மாவட்டங்களின் வளர்ச்சி குறித்து பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கேள்வி எழுப்புவோம். விவசாயிகளின் பிரச்னைகள், நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து முதல் மூன்று அல்லது நான்கு நாட்கள் விவாதிக்க முடிவு செய்துள்ளன.
மத்திய அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்த, மாநில காங்கிரஸ் அரசு தவறியது பெரிய சதி. இங்கு முன்னேற்ற அறிக்கையை வழங்காமல், மத்திய அரசு நிதி தரவில்லை என்று கூறி, மாநில மக்களை முட்டாளாக்க மாநில அரசு முயற்சிக்கிறது. தங்கள் தோல்வியை மறைக்க, மத்திய அரசை அக்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

