/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மக்களிடம் குறை கேட்க மாநகராட்சி கமிஷனர் முடிவு
/
மக்களிடம் குறை கேட்க மாநகராட்சி கமிஷனர் முடிவு
ADDED : ஜூலை 10, 2025 03:40 AM

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர், வாரத்தில் இரண்டு நாட்கள் பொது மக்களின் குறைகளை கேட்டறிய திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனராக பொறுப்பேற்ற மஹேஸ்வர ராவ், நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கிறார்.
அவ்வப்போது நகரை சுற்றி வந்து, சாலைகளை ஆய்வு செய்கிறார்; மழைநீர் கால்வாய்களை பார்வையிடுகிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடுகிறார்.
தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் மண்டல அளவில், பொது மக்களின் குறைகளை கேட்டறிய முடிவு செய்துள்ளார்.
மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்யவும் தயாராகிறார்.
வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில், அந்தந்த மண்டல எல்லையில், அதிகாரிகளுடன் காலை 7:00 மணி முதல், 10:00 மணி வரை வெவ்வேறு இடங்களில், ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதே நாட்களில், காலை 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை பொது மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிவார். அப்போது அவரிடம் மக்கள் பிரச்னைகளை கூறி, தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

