/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக பள்ளிகளில் 3வது மொழியாக தமிழ்; சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உறுதி

ADDED : டிச 07, 2025 07:15 AM
கன்னட கலையரங்கம் நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:
கர்நாடகாவில் உள்ள பள் ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கு மூன்றாவது மொழியாக தமிழ் சேர்க்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உறுதி அளித்தார்.
பெங்களூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு இன்றியமையாதது. விதான் சவுதா கட்டியதிலும் தமிழர்களுக்கு பங்கு உண்டு. அந்த காலத்தில் கட்டுமான பணிக்கு தமிழகத்தில் இருந்து பலர் வந்தனர். வியாபாரம், கூலி என பல விதமான தொழில்களை செய்வதற்கும் வந்தனர்.
அனைத்து மொழி பேசுபவர்கள் வாழும் நகரம் பெங்களூரு. இங்கு, அனைத்து மொழிகளையும் கேட்க முடியும். இதுபோன்ற, பன்மொழி கொண்ட நகரம் இந்தியாவிலே வேறு எங்கும் இல்லை. தமிழ் மொழி 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
சிறுவர் - சிறுமியர் மொபைல் போன் உபயோகத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதுவே, அவர்களின் மூளை, உடல் வளர்ச்சிக்கு நல்லது. தமிழில் காமராஜர், ஈ.வெ.ரா., ராஜாஜி போன்ற பல தலைவர்கள் கொடி கட்டி பறந்தனர். பெங்களூரில் தமிழ், தெலுங்கு, உருது பேசும் மக்கள் அதிகமாக உள்ளனர். கர்நாடகாவில் தமிழை மூன்றாவது மொழியாக தேர்வு செய்து படிப்பது குறித்து கல்வி அமைச்சரிடம் கோரிக்கை வைப்பேன். இது நியாயமான கோரிக்கை. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.