/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பள்ளிகளுக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு; லோக் ஆயுக்தா கண்டுபிடிப்பு
/
அரசு பள்ளிகளுக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு; லோக் ஆயுக்தா கண்டுபிடிப்பு
அரசு பள்ளிகளுக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு; லோக் ஆயுக்தா கண்டுபிடிப்பு
அரசு பள்ளிகளுக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு; லோக் ஆயுக்தா கண்டுபிடிப்பு
ADDED : டிச 07, 2025 07:13 AM
பெங்களூரு: லோக் ஆயுக்தா வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் அரசு தொடக்க பள்ளிகள், கர்நாடக பப்ளிக் பள்ளிகளுக்கு லேப்டாப், ஸ்மார்ட் எல்.இ.டி., போர்டு, எல்.இ.டி., புரொஜக்டர் வாங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக, கல்வித்துறை ஊழியர்கள், பொது மக்களிடம் இருந்து, புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்தது.
லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி பி.எஸ்.பாட்டீல், தலைமையில் லோக் ஆயுக்தா போலீசார், கடந்த வாரம் கல்வித்துறை இணை இயக்குநர், இரண்டு துணை இயக்குநர்கள் உட்பட 12 கல்வித்துறை அதிகாரிகளின் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
தொடக்கப்பள்ளி, கர்நாடக பப்ளிக் பள்ளிகளுக்கு லேப்டாப், ஸ்மார்ட் எல்.இ.டி., போர்டு, எல்.இ.டி., புரொஜக்டர், யு.பி.எஸ்., இன்வெர்டர், பேட்டரிகளை சப்ளை செய்ய, 2025ன் ஏப்ரலில் டெண்டர் அழைக்கப்பட்டது. இந்த பொருட்கள், பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்பட்டன.
ஆனால் டெண்டர் ஆவணங்களில் உள்ள தொழில்நுட்ப விபரங்களுக்கும், பள்ளிகளுக்கு சப்ளை செய்துள்ள பொருட்களின் தொழில்நுட்ப விபரங்கள், பரஸ்பரம் ஒத்து போகவில்லை.
பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ள, அனைத்து பொருட்களுக்கு செலுத்தப்பட்ட தொகைக்கும், அதே பொருட்களுக்கு மார்க்கெட்டில் உள்ள விலையுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
ஒவ்வொரு லேப்டாப்புக்கும், மார்க்கெட் விலையை விட 10,000 ரூபாய், யு.பி.எஸ்., சிஸ்டமுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய், எல்.இ.டி., டி.வி.,க்கு 15,000 ரூபாய் கூடுதலாக பில் தொகை செலுத்தியுள்ளனர்.
ஜாலஹள்ளி கே.பி.எஸ்., பள்ளியில் ஆய்வு செய்த போது, அங்கு லேப்டாப்களே இல்லை.
அப்பள்ளியின் ஆசிரியரை தொடர்பு கொண்ட நீதிபதி, பள்ளிக்கு சப்ளை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை காட்டும்படி உத்தரவிட்டார்.
ஆசிரியர் வீடியோ காலில் வந்து, ஸ்மார்ட் எல்.இ.டி., போர்டு, எல்.இ.டி., புரொஜக்டரை மட்டுமே காட்டினார்.
லேப்டாப்கள் இல்லை. இதே போன்று, மற்ற பள்ளிகளிலும் நடந்திருக்கலாம்.
விரிவான விசாரணைக்கு பின், எந்த அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது என்பது தெரியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

