வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 10 அதிகாரிகள் வீடுகளில் 'லோக் ஆயுக்தா ரெய்டு'
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 10 அதிகாரிகள் வீடுகளில் 'லோக் ஆயுக்தா ரெய்டு'
ADDED : ஜூலை 08, 2026 11:15 PM
பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமா க சொத்து சேர்த்த, 10 அரசு அதிகாரிகள் வீடுகளில், 'லோக் ஆயுக்தா' போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தங்க நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் சிக்கின.
பெங் களூரு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நரேந்திர குமார்; கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக கண்காணிப்பு பொறியாளர் பிரவீன் ஸ்ரீஹரி; பெங்களூரு வேளாண் விளைபொருள் சந்தை குழு துணை இயக்குனர் புஷ்பா.
ராய்ச்சூர் கிருஷ்ணா பாக்ய ஜல நிகம செயற்பொறியாளர் பசனகவுடா பாட்டீல்; சித்ரதுர்கா தோட்டகலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சங்கர்.
சித்ரதுர்கா வன சரக அதிகாரி துக்கப்பா; துமகூரு சிறிய நீர்பாசன துறை உதவி பொறியாளர் மதுசூதன்; பெங்களூரு தெற்கு கும்பலகோடு பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி திம்மே கவுடா; ஷிவமொக்கா உதவி வன பாதுகாவலர் கிரண் அங்காடி; கலபுரகி கெஸ்காம் உதவி செயற்பொறியாளர் அம்ருத் ராவ்.
மேற்கண்ட, 10 அரசு அதிகாரிகளும் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு புகார்கள் சென்றன.
இந்த புகார்களின் அடிப்படையில், நேற்று காலை 6:00 மணி முதல், இந்த பத்து அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், ராய்ச்சூர், சித்ரதுர்கா, துமகூரு, ஷிவமொக்கா, கலபுரகி ஆகிய ஏழு மாவட்டங்களில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
அரசு அதிகாரிகள், அவர்களின் பினாமிகள் வீடுகள், அலுவலங்களில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் கணக்கில் வராத ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ஆடம்பர பங்களாக்கள், வணிக கட்டடங்கள், பண்ணை வீடுகள் வாங்கியதற்கான 43.89 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கின.
ஆவணங்களை பறிமுதல் செய்து போலீசார் எடுத்து சென்றனர். முறைகேடாக சொத்துகள் குவித்த அதிகாரிகள் மீது, லோக் ஆயுக்தா போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
