/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துாக்கத்தில் நடக்கும் மகளை கொன்ற தாய், வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் சிறை
/
துாக்கத்தில் நடக்கும் மகளை கொன்ற தாய், வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் சிறை
துாக்கத்தில் நடக்கும் மகளை கொன்ற தாய், வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் சிறை
துாக்கத்தில் நடக்கும் மகளை கொன்ற தாய், வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் சிறை
ADDED : டிச 02, 2025 04:22 AM
பெங்களூரு: துாக்கத்தில் நடக்கும் நோயால் அவதிப்பட்ட மகளை, அடித்து கொன்ற தாய் மற்றும் வளர்ப்பு தந்தைக்கு, கீழ்நிலை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ரேகா, 33. இவரது கணவர் தினேஷ். தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதற்கிடையே பித்யூத் மண்டல், 33, என்பவருடன் ரேகாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.
கணவரையும், மூத்த மகளையும் விட்டு விட்டு, இளைய மகள் பப்லி, 8, யை அழைத்து கொண்டு, கள்ளக்காதலர் பித்யூத் மண்டலுடன் பெங்களூரு வந்தார். பீன்யாவில் கணவன், மனைவி போன்று வாழ்ந்தனர்.
துாக்கத்தில் மகள் பப்லிக்கு, துாக்கத்தில் எழுந்து அழுதபடி வெளியே செல்லும் நோய் இருந்தது. தினமும் நள்ளிரவில் எழுந்து வெளியே சென்று விடுவார். இதனால் நிம்மதியாக வாழ முடியவில்லை என, பித்யூத் மண்டல் கோபத்தில் இருந்தார். 2016ன் ஜூன் 26ல், நள்ளிரவு 12:00 மணிக்கு வழக்கம் போன்று, துாக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட பப்லி, கதவை திறந்து கொண்டு வெளியே சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை.
மகளை தேடி கண்டுபிடித்து, வீட்டுக்கு அழைத்து வந்த ரேகா, பித்யூத் மண்டல் மர பலகையால் சிறுமியின் கையில் அடித்தனர். தலையை பிடித்து சுவரில், பல முறை மோதினர். இதில் பலத்த காயமடைந்த பப்லி உயிரிழந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பீன்யா போலீசார், ரேகாவையும், பித்யூத் மண்டலையும் கைது செய்தனர்.
அபராதம் பெங்களூரின் 50வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவர்களின் குற்றம் உறுதியானதால், அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து, 2018ன் நவம்பர் 14ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து இருவரும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், 'சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாயும், வளர்ப்பு தந்தையும் தாக்கியதால் காயங்கள் ஏற்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. சிறார்களுக்கு சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை என்பதை, இச்சம்பவம் உணர்த்துகிறது. கொலை நோக்கத்துடன் மகளை தாக்கவில்லை என, குற்றவாளிகள் கூறுவது ஏற்கும்படி இல்லை. இவர்களுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தண்டனை சரிதான். இதில் உயர் நீதிமன்றம் தலையிடாது' என கூறி, இருவரது தண்டனையை, நவம்பர் 29ல் உறுதி செய்தது.

