/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பேனரை அகற்ற கூறியதால் தகராறு; பஞ்சாயத்து காங்., கவுன்சிலர் படுகொலை
/
பேனரை அகற்ற கூறியதால் தகராறு; பஞ்சாயத்து காங்., கவுன்சிலர் படுகொலை
பேனரை அகற்ற கூறியதால் தகராறு; பஞ்சாயத்து காங்., கவுன்சிலர் படுகொலை
பேனரை அகற்ற கூறியதால் தகராறு; பஞ்சாயத்து காங்., கவுன்சிலர் படுகொலை
ADDED : டிச 07, 2025 06:50 AM

சிக்கமகளூரு: தத்த ஜெயந்திக்காக வைக்கப்பட்ட பேனரை அகற்றுமாறு கூறியதால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் கணேஷ் கவுடா, அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பஜ்ரங் தள் அமைப்பின் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயப்பட்டணா கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் கணேஷ் கவுடா, 40. காங்கிரசை சேர்ந்தவர்.
இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும், மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட, தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
இந்நிலையில் சிக்கமகளூரின் முல்லையனங்கிரியில் உள்ள, தத்த குகைக்கோவிலில் நடக்கும் தத்த ஜெயந்திக்காக, சிக்கமகளூரு மாவட்டம் முழுதும் ஹிந்து அமைப்பினர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. சக்கராயப்பட்டணா பஸ் நிலைய பகுதியிலும், நிறைய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
காரில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு பேனர் சரிந்து அரசு பஸ் மீது விழுந்தது. இதனால் சாலையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றுவதற்கு கணேஷ் கவுடா நடவடிக்கை எடுத்தார்.
பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்களிடம், 'பொதுமக்களுக்கு இடைஞ்சல் இன்றி பேனர் வைத்து கொள்ளுங்கள்' என்று கூறி உள்ளார்.
இதுதொடர்பாக கணே ஷுக்கும், பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் மாலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு காரில் கணேஷும், அவரது நண்பர்கள் சிலரும் சக்கராயப்பட்டணா பஸ் நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
நான்கு பைக்குகளில் வந்த கும்பல், காரை மறித்து கணேஷுடம் தகராறு செய்தனர். அவரை காரில் இருந்து வெளியே இழுத்து தாக்கினர்.
5 பேர் கைது இ தனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், பைக்கில் வந்த கும்பலை தாக்கினர். இரு குழுவினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இந்த நேரத்தில் பைக்கில் வந்தவர்களில் ஒருவர், அரிவாளை எடுத்து கணேசை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.
கழுத்து, முதுகில் பலத்த வெட்டு காயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்ததும் சிக்கமகளூரு மாவட்ட எஸ்.பி., விக்ரம் ஆம்தே, சக்கராயப்பட்டணா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
மரு த்துவமனையில் இருந்த கணேஷ் உடலுக்கு எம்.எல்.ஏ.,க்கள் தம்மய்யா, ஆனந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கணேஷ் கொலை தொடர்பாக பஜ்ரங் தள் அமைப்பின் 6 பேர் மீது வழக்குப்பதிவானது. இவர்களில் சஞ்சய், நிதின், நாகபூஷன், அஜய், மிதுன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

