/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிக சொத்து வரி வசூலித்தவர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரி தாராள பரிசு
/
அதிக சொத்து வரி வசூலித்தவர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரி தாராள பரிசு
அதிக சொத்து வரி வசூலித்தவர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரி தாராள பரிசு
அதிக சொத்து வரி வசூலித்தவர்களுக்கு பஞ்சாயத்து அதிகாரி தாராள பரிசு
ADDED : டிச 08, 2025 05:50 AM
கலபுரகி: பல ஆண்டுகளாக பாக்கியுள்ள சொத்து வரியை வசூலிக்க ஆலந்த் தாலுகாவின் கிராம பஞ்சாயத்துகள், புதிய வழிமுறையை கையாளுகின்றன. கிராமத்தினர் வயலுக்கு செல்வதற்கு முன்பே, அவர்களின் வீட்டுக்கு சென்று வரி வசூலிக்கின்றனர்.
கலபுரகி மாவட்டம், ஆலந்த் தாலுகாவில் 42 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கிராமங்களில், சொத்து வரி வசூலிப்பது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
பல ஆண்டுகளாக வரி பாக்கி வைத்துள்ளனர். இதை வசூலிக்க அதிகாரிகள் புதுப்புது வழிகளை கையாளுகின்றனர். வரி பாக்கி வைத்துள்ள வீடுகளுக்கு, கிராம பஞ்சாயது ஊழியர்கள் நோட்டீஸ் அளிக்கின்றனர். மூன்று நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் வரி தொகையை தயார் செய்து கொள்ளும்படி உத்தரவிடப்படுகிறது.
மூன்று நாட்களுக்கு பின், வீடுகளில் உள்ளவர்கள் வயலுக்கு செல்வதற்கு முன்பே, அதிகாலை 5:30 மணிக்கே அவர்களின் வீட்டு முன் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆஜராகி, வரியை வசூலிக்கின்றனர்.
தினமும் அதிகாலை 5:30 மணி முதல் மதியம் 12:--00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை வீடு வீடாக சென்று வரி வசூலிக்கின்றனர். அதிகாலையே ஊழியர்கள் வருவதால், பலரும் வரியை செலுத்துகின்றனர்.
இது குறித்து ஆலந்த் தாலுகா பஞ்சாயத்து செயல் நிர்வாக அதிகாரி மானப்பா கட்டிமனி கூறியதாவது:
அதிகாலை தயக்கத்துடன் வரி வசூலிக்க சென்றோம். அடிப்படை வசதிகள் இ ல்லை என, கேள்வி எழுப்பி வரி செலுத்த மக்கள் மறுப்பர் என, நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. மக்கள் எங்களை வரவேற்று, வரியை செலுத்தினர்.
பொது மக்கள் வரியை சரியாக செலுத்தினால் மட்டுமே, கிராமத்தில் வளர்ச்சி பணிகளை செய்ய முடியும் என்பதை, கிராமத்தினருக்கு புரிய வைத்துள்ளோம்.
அதிகமான வரி வசூலிக்கும் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகள், பில் கலெக்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் சிலருக்கு, என் சொந்த செலவில் டிராலி பேக், டைட்டன் கைகடிகாரம் வாங்கி பரிசளித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

