/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போதை பொருட்களை அனுமதிக்காததால் ஆத்திரம் ' ஜெயிலர், போலீசாரை கொடூரமாக தாக்கிய கைதிகள்
/
போதை பொருட்களை அனுமதிக்காததால் ஆத்திரம் ' ஜெயிலர், போலீசாரை கொடூரமாக தாக்கிய கைதிகள்
போதை பொருட்களை அனுமதிக்காததால் ஆத்திரம் ' ஜெயிலர், போலீசாரை கொடூரமாக தாக்கிய கைதிகள்
போதை பொருட்களை அனுமதிக்காததால் ஆத்திரம் ' ஜெயிலர், போலீசாரை கொடூரமாக தாக்கிய கைதிகள்
ADDED : டிச 07, 2025 07:52 AM
உத்தரகன்னடா: போதை பொருட்களை சிறைக்குள் அனுமதிக்காத காரணத்தால், ஜெயிலர் உட்பட நான்கு போலீசாரை, ரவுடிகள் வெறித்தனமாக தாக்கினர். காயமடைந்த போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்த ரவுடிகள் முகமது அப்துல் பயான், 35, கவுஷிக் நிஹால், 32. இவர்கள் மீது கொள்ளை உட்பட 12 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இவர்களை கைது செய்த போலீசார், மங்களூரு சிறையில் அடைத்திருந்தனர்.
மங்களூரு சிறையில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததால், கூடுதல் கைதிகளை உத்தரகன்னடா மாவட்டம், கார்வார் சிறைக்கு மாற்றப்பட்டனர். மாற்றப்பட்ட கைதிகளில் ரவுடிகளான முகமது அப்துல் பயான், கவுஷிக் நிஹாலும் இடம் பெற்றனர்.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா உட்பட பல்வேறு சிறைகளில் போதை பொருள் பயன்படுத்துவது, வெளிச்சத்துக்கு வந்ததால், சிறை அதிகாரிகள் தர்ம சங்கடத்துக்கு ஆளாகினர்.
சிறைக்குள் போதை பொருள் நுழையாமல், கண்காணிப்பை பலப்படுத்தினர். கைதிகளை பார்க்க வருவோரை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கினர். அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கைதிகளுக்கு பீடி, சிகரெட் கிடைக்கவில்லை; துண்டு பீடியாவது தாருங்கள் என கைதிகள் மன்றாடுகின்றனர்.
சில நாட்களுக்கு முன், கார்வார் சிறையில் உத்தரகன்னடா போலீசார், சோதனை நடத்திய போது, முகமது அப்துல் பயான் இருந்த செல்லில், கீபேட், மொபைல் போன், லைட்டர் உட்பட, தடை செய்யப்பட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் போதை பொருள் தொடர்பாக, ஜெயிலர் கல்லப்பா கஸ்திக்கும், கைதிகளுக்கும் நேற்று காலையில் காரசார வாக்குவாதம் நடந்தது.
அப்போது கைதிகள் முகமது அப்துல் பயான், கவுஷிக் நிஹாலும் ஜெயிலரின் வயிற்றில் காலால் எட்டி உதைத்ததுடன், கதவின் கண்ணாடியை உடைத்தனர். தடுக்க வந்த போலீசாரை கொலை வெறியுடன் தாக்கினர். ஜெயிலர், வார்டன் உட்பட நான்கு போலீசார் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சிறையின் மற்ற போலீசார், இரண்டு ரவுடி கைதிகளை பிடித்து, உதைத்து செல்லில் அடைத்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

