தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தொழிலதிபரை மிரட்டி ரூ.2.57 கோடி பறிப்பு இளைஞர் காங்., பிரமுகர் உட்பட இருவர் கைது

 தொழிலதிபரை மிரட்டி ரூ.2.57 கோடி பறிப்பு இளைஞர் காங்., பிரமுகர் உட்பட இருவர் கைது

 தொழிலதிபரை மிரட்டி ரூ.2.57 கோடி பறிப்பு இளைஞர் காங்., பிரமுகர் உட்பட இருவர் கைது


ADDED : ஜூன் 10, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தட்சிண கன்னடா: ஜூன் 10-: 'ஹனி டிராப்'பில் சிக்கிய தன்னை காப்பாற்றம்படி மங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொது செயலரிடம் தொழிலதிபர் உதவி கேட்க, அவரையே மிரட்டி, 2.77 கோடி ரூபாய் பறித்தவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் ஒப்பந்த நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபரை, 2024 ஜனவரியில் தொடர்பு கொண்ட ஜித்தேஷ் என்பவர், 'தொழிலதிபர், வேறொரு பெண்ணுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படம், வீடியோவை அனுப்பினார்.

இதை பார்த்த தொழிலதிபர் அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோவை வெளியே பரப்பக்கூடாது என்றால், தனக்கு 35 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று ஜிதேஷ் மிரட்டினார்.

காசோலை தொழிலதிபரும், ஜிதேஷுக்கு காசோலை மூலம் பணம் கொடுத்தார். சில நாட்கள் கழித்து மீண்டும் தொழிலதிபரை தொடர்பு கொண்ட ஜித்தேஷ், மீண்டும் பணம் கேட்டார். தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் 10 லட்சம், 15 லட்சம் ரூபாய் என இரண்டு தவணையாக வழங்கினார்.

இந்த காசோலைகளை வைத்து கொண்டு, வங்கியில் பணம் எடுக்க முயன்றார். ஆனால் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்ததால் பணத்தை எடுக்க முடியவில்லை.

பின், மே மாதம் தொழிலதிபர் வீட்டுக்கே ஜித்தேஷ் சென்று, பணம் கேட்டு மிரட்டினார். இதனால் அதிருப்தி அடைந்த தொழிலதிபர், இவ்விஷயத்தை மங்களூரு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த, தனது நிறுவனத்தில் பணிபுரியும் நிஜாமிடம் முறையிட்டார்.

அவரும் தொழிலதிபர் வீட்டுக்கு வந்து, ஜித்தேஷை தன்னுடன் அழைத்து சென்றார். ஒரு வாரத்துக்கு பின், தொழிலதிபரை சந்தித்த நிஜாம், 'உங்களை மிரட்டிய ஜித்தேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் உங்களின் பெயரை குறிப்பிட்டு உள்ளார். இது வைரலானால், கைது செய்யப்பட்டு, 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்' என மிரட்டினார்.

மீண்டும் மிரட்டல் இவ்விஷயம் வெளியே தெரியாத வகையில், பணம் கொடுத்து 'செட்டில்' செய்துவிடலாம் என்று கூறி, 2024 ஜூன் முதல் 2026 ஜனவரி வரை 2.57 கோடி ரூபாயை நிஜாம் பெற்றுள்ளார். ஒரு நாள் சாலையில் ஜித்தேஷை பார்த்த தொழிலதிபர், நிஜாமிடம் விசாரித்தார். அதற்கு நிஜாம், ஜித்தேஷ் போன்று மிரட்ட துவங்கினார்.

இதையடுத்து ஜூன் 1ம் தேதி மீண்டும் தொழிலதிபரை தொடர்பு கொண்ட ஜித்தேஷ், 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார். இதனால் கோபம் அடைந்த தொழிலதிபர், உர்வா போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

'ஹனி டிராப்' வழக்கில் சிக்கிய நிஜாமை, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலர் பதவியில் இருந்து நீக்கி, மாவட்ட தலைவர் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us