ADDED : ஏப் 26, 2024 11:40 PM

சென்னை: சென்னை தி.நகரில், பிரபலமாக இருக்கும் 'பத்மம்' சைவ உணவகம், தன் இரண்டாவது கிளையை, சாலிகிராமத்தில் துவக்கியுள்ளது. இக்கிளையை, திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து பத்மம் உணவகத்தின் நிர்வாகக் குழுவினர் கூறியதாவது: தென்னிந்தியாவின் பாரம்பரிய சுவையுடன், நவீன காலத்திற்கேற்ப, சுவை மாறாமல், தரமான உணவுகளை ருசியுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு, பத்மம் உயர்தர சைவ உணவகங்கள் சென்னையில் திறக்கப்பட்டுள்ளன. தற்போது, சாலிகிராமத்தில் திறக்கப்பட்டுள்ள எங்களது கிளை 6,000 சதுர அடி பரப்பளவில், சுற்றப்புற பாரம்பரியமும், நவீனமும் கலந்த மனதுக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.
உணவகத்தில் சிறப்பம்சமாக வெஜ் இடியாப்ப பிரியாணி மற்றும் ஆந்திரா பெசரட்டு உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப தரமான பொருட்களைக் கொண்டு, சுகாதாரமான முறையில் இங்கு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
சைவ உணவுப் பிரியர்களின் சுவையை நிறைவு செய்யும் வகையில், தென்னிந்தியா முழுதும், எங்கள் உணவகத்தின் கிளைகளை விரைவில் துவக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு கூறினர்.

