மருந்து துறையில் ரூ.11,000 கோடி முதலீட்டை ஈர்த்தது தெலுங்கானா
மருந்து துறையில் ரூ.11,000 கோடி முதலீட்டை ஈர்த்தது தெலுங்கானா
ADDED : பிப் 27, 2025 11:19 PM

ஹைதராபாத்,:தெலுங்கானா மாநிலம், மருந்து துறையில் 11,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. ஹைதராபாத்தில் கடந்த 25, 26ம் தேதிகளில் நடைபெற்ற 'பயோ ஆசியா 2025' உயிரி அறிவியல் மாநாட்டில், இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இதன் வாயிலாக 22,300க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
'பாரத் பயோடெக், சாய் லைப் சயின்சஸ் கிரானுல்ஸ், ஆர்பிகுலர், ஐசண்ட், பயோலாஜிக்கல் இ, விர்ச்சோ, ஜூபிலன்ட்' உள்ளிட்ட மருந்து நிறுவனங்களுடன் 5,445 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக 9,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவைதவிர, அமெரிக்காவின் எம்.எஸ்.டி., ஆஸ்திரேலியாவின் ஏ.எல்.எஸ்., உள்ளிட்ட மருந்து நிறுவனங்களும் தெலுங்கானாவில் தொழில் துவங்க முன்வந்து உள்ளன.
“இந்த முதலீடுகள், உயிரி அறிவியல், மருந்தியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துக்கான முன்னணி மாநிலமாக தெலுங்கானா தொடர்வதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இத்துறையில் புதுமை, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் கொள்கைகளை வகுக்க அரசு உறுதி பூண்டுள்ளது” என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

