ADDED : பிப் 27, 2025 11:17 PM

புதுடில்லி:மத்திய அரசின் குறிப்பிடத்தக்கக் கொள்கையால், இந்திய பொம்மைகள் தொழில்துறை வலுவான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 2020ல் தரக் கட்டுப்பாடு ஆணைகளை செயல்படுத்தியதன் வாயிலாக, பொம்மைகளின் தரம் உறுதி செய்யப்பட்டது. மேலும், இறக்குமதியை கணிசமாகக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இறக்குமதி வரிகளை 20 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தியது.
கடந்த 2023ம் ஆண்டில், 13,050 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பொம்மைகள் சந்தை, அரசின் குறிப்பிடத்தக்க கொள்கைகளால் வளர்ச்சி பெற்றுள்ளன. மேலும், வரும் 2032ம் ஆண்டில், 15.61 லட்சம் கோடி ரூபாயை இத்துறை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

